போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 31-08-2023
தேசியம் :-

புவிசார் குறியீடு - முக்கிய குறிப்புகள்
- 1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
- உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை
- புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்- வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவது.
- நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் - தமிழ்நாடு(58 பொருட்கள்)
- தமிழகத்தில் முதன்முதலில் புவிசார் குறியீடு பெற்ற பொருள் - காஞ்சிபுரம் பட்டு(2005-06)
- தமிழகத்தில் அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம் - தஞ்சாவூர்
- இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற முதல் பொருள் - டார்ஜிலிங் டீ(2004)
- மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புவிசாா் குறியீடு பதிவுத் துறை அலுவலகம் அமைந்துள்ள இடம் - சென்னை
சர்வதேசம் :-

- Miss world எனப்படும் உலக அழகி போட்டியானது ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
- 2023ஆம் ஆண்டுக்கான 71ஆவது உலக அழகி போட்டி இந்தியாவில் காஷ்மீரில் நடைபெறவுள்ளது.
- இந்த போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு போட்டியில் ‘மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற சினி ஷெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.
முக்கிய குறிப்புகள்
- எரிக் மோர்லே என்பவர் கடந்த 1951-ஆம் ஆண்டில் ‘மிஸ் வேர்ல்டு' போட்டியை தொடங்கினார்.
- 1996-ஆம் ஆண்டில் ‘மிஸ்வேர்ல்டு' போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்றது.
- ‘மிஸ் வேர்ல்டு' பட்டம் வென்ற முதல் இந்தியர் - ரீட்டா ஃபரியா (1966)
- இதுவரை ‘மிஸ் வேர்ல்டு' பட்டம் வென்ற இந்தியர்கள் - 6(ரீட்டா ஃபரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டயானா ஹெய்டன்(1997), யுக்தா முகி(1999), பிரியங்கா சோப்ரா(2000), மனுஷி சில்லார்(2017))
- 2022-ஆம் வருடம் ‘மிஸ் வேர்ல்டு' பட்டத்தை வென்றவர் - போலந்தை சேர்ந்த கரோலினா
தமிழ்நாடு :-

- நெதர்லாந்து நாட்டு அரசு சார்பில் ‘1,000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை’ திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று(ஆகஸ்ட் 30) தொடங்கிவைத்தார்.
- இத்திட்டத்தால், நீர் சமநிலை அடைவதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, குடிநீர் தேவையை பற்றாக்குறை இல்லாமல் நிவர்த்தி செய்ய முடியும்,'' என, அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
- இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் சென்னைக்குத் தேவைப்படும் குடிநீரை முழுமையாக வழங்க முடியும்.
- இந்த திட்டத்துக்குத் தேவையான அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளம், நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும்.
- இத்திட்டம் நெதர்லாந்து நாட்டிற்கான சர்வதேச நீர் விவகாரங்களுக்கான முதல் சிறப்பு தூதர் ‘ஹெங்க் ஓவிங்க்’ என்பவரின் முன் முயற்சியாகும்.

சந்திராயன் 1(2008) - மயில்சாமி அண்ணாதுரை
- கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் 1982 -ஆம் ஆண்டில் ISRO-வில் பணியில் சேர்ந்து பல்வேறு செயற்கைக்கோள் வடிவமைப்புத் திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
- IRS-1A, இன்சாட்-2A, இன்சாட்-2B, இன்சாட் -2C, இன்சாட்-2D, இன்சாட்-2E, இன்சாட்-3B, ஜிசாட்-1, இன்சாட்-3E, எஜுசாட் போன்ற செயற்கைக்கோள்களை வடிவமைத்து விண்ணில் செலுத்தியதில் பெரும்பங்காற்றினார்.
- இவர் மங்கள்யான் திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார்
- சந்திராயன் 1 திட்டத்தை 2008-இல் வெற்றியாக்கியதை அடுத்து மயில்சாமி அண்ணாதுரை “இந்தியாவின் நிலவு மனிதர்” என்று போற்றப்பட்டார்
மங்கள்யான்(2013)- அருணன் சுப்பையா
- 2013-ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள "மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக செயலாற்றியவர்.
- அருணன், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர்.
- இவர், திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் பயின்றுள்ளார்.
- பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
- 1984-இல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனது பணியை துவக்கினார்.
சந்திரயான் 2(2019) – வனிதா முத்தையா
- ‘ராக்கெட் பெண்மணி’ என்றழைக்கப்படும் வனிதா முத்தையா, சந்திரயான் 2 திட்ட இயக்குநராக செயலாற்றினார்.
- ISRO-வின் முதல் பெண் திட்ட இயக்குநர் வனிதா முத்தையா.
- சந்திரயான் 2 திட்டத்துக்கு முன்பாக கார்டோசாட் 1, ஓசன்சாட் 2 உள்ளிட்ட பல திட்டங்களில் இவர் பங்களித்திருக்கிறார்.
சந்திரயான் 3(2023) வீரமுத்துவேல்
- விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல், சென்னையில் எம்.டெக் முடித்தார்.
- ISRO-வின் முதல் நானோ செயற்கைக் கோள் குழுவை வழிநடத்தும் வாய்ப்பை பெற்று மூன்று நானோ சாட்டிலைட்டையும் ஏவியுள்ளார்.
- சந்திரயான் 2 இணை திட்டத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய பின்னர் சந்திரயான் 3-இன் திட்ட இயக்குனராக இயக்குநராக 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார்.
ஆதித்யா L1 (2023) - நிகர் சாஜி
- தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் சாஜி, இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் முடித்துள்ளார்.
- தற்போது சூரிய ஆய்வுக்கான ஆதித்யா L1 விண்கலம் திட்ட இயக்குநராகசெயல்பட்டு வருகிறார்.
குறிப்பு – ‘திட்ட இயக்குனர்’ என்பது மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளை தயாரித்தல் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பது, விண்கலத்தை இறுதி வடிவத்துக்கு கொண்டுவந்து விண்கலத்தை அனுப்பும் வரை பொறுப்பு ஏற்று செயல்படுத்துவதாகும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :-

- மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான எஞ்சின் சோதனை வெற்றி அடைந்ததாக ISRO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ககன்யான் திட்டத்திற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் ISRO, தற்போது சி.20 கிரையோஜெனிக் எஞ்சினை நெல்லை மாவட்டம், காவல் கிணறு பகுதியில் உள்ள மகேந்திர கிரி விண்வெளி ஆய்வு மையத்தில் சோதனை நடத்தியது.
- 12 விநாடி நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றியடைந்தாக ISRO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டம்
- ககன்யான் திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர்.
- ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
- இதன்படி 2007-ஆம் ஆண்டில் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.
- 2014-ஆம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
- விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி பெற்றனர்.
- வரும் 2024-ஆம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. அதனோடு 'வியோமித்ரா' என்ற பெண் ரோபோ அனுப்பப்படுகிறது. இந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து ISRO-வுக்கு தகவல் அனுப்பும்.
- அதன்பின் 2024-ஆம் ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- இத்திட்டம் LVM3 – HLVM3 ராக்கெட் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
முக்கிய நாட்கள்:-

- பண்டைய இந்திய மொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதத்தை போற்றி மதிப்பளிக்கும் வகையிலும் அதன் பன்முகத்தன்மையை உலகறிய செய்வதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 ஆம் நாளானது உலக சமஸ்கிருத தினமாக கொண்டாடப்படுகிறது.
- இத்தினம் 1969- ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் சமஸ்கிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட ஆண்டு - 2005
இராணுவம்:-

- இந்திய கடற்படைக்காக அதிநவீன அம்சங்களுடன் உள்நாட்டில் கட்டப்பட்ட ‘INS மகேந்திரகிரி' போர்க் கப்பல் நாட்டுக்கு நாளை(செப்டம்பர் 1) அர்ப்பணிக்கப்படவுள்ளது.
- மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர் இந்தப் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கவிருக்கிறார் என்று இந்திய கடற்படை தெரிவித்ததுள்ளது.
- கடற்படைக்காக ‘Project 17 Alpha frigates (P-17A)’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 7-வது போர்க் கப்பல் இதுவாகும்.
- எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர்வு சாதனங்களுடன் கூடிய இந்தப் போர்க் கப்பல், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வல்லமையின் அடையாளமாக திகழ்கிறது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
‘Project 17A’- முக்கிய குறிப்புகள்
- ‘Project 17A’ என்ற திட்டத்தின் கீழ் INS நீலகிரி, INS உதயகிரி, INS தாராகிரி, INS மகேந்திரகிரி, INS ஹிம்கிரி, INS துனாகிரி, INS விந்தியகிரி ஆகிய 7 போர்க் கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
- இதில் நீலகிரி, உதயகிரி, தாராகிரி, ஹிம்கிரி, துனாகிரி ஆகிய 5 போர்க்கப்பல்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு பல்வேறு வகைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
- அண்மையில் 6-வது போர்க் கப்பலான INS விந்தியகிரியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 17 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- P-17A போர்க் கப்பல்களின் கட்டுமானத்துக்காக 75 சதவீத உபகரங்கள் மற்றும் இதர அமைப்புமுறைகள், உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.