போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 10-08-2023
தேசியம் :-

- வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணம் தனது சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்பது வங்கிகளின் விதிமுறை.
- மினிமம் கட்டணத்தை வைக்காதவர்கள் அதற்கான கட்டணத்தை வங்கிகள் வசூலித்து வருகின்றன.
- அதேபோல ஏடிஎம்களில் 5 முறை பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலோ அல்லது வேறு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை செய்தாலோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
- அதே போல் எஸ்எம்எஸ் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது வங்கிகள்.
- இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணியில் உள்ள தனியார் துறை வங்கிகளான Axis Bank, HDFC Bank, IndusInd Bank, ICICI Bank & IDBI Bank ஆகிய வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் தொகை விவரங்களை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்திருக்கிறார். அதன்படி,
- வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காமல் உள்ள வாடிக்கையாளர்களிடம் 5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம் - 21,044 கோடி
- நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ஏடிஎம்களில் கூடுதலாக பணம் எடுத்ததற்கான கட்டணம் - 8,289 கோடி
- குறுஞ்செய்தி அனுப்பும் சேவைக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் - 6,254 கோடி
தமிழ்நாடு :-

- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதுவரை கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டன.
- இங்கு ஏற்கெனவே தங்க அணிகலன், சுடுமண் காளை, ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, படிக எடைக் கல் என 200-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்நிலையில் ஒரு குழியில் 190 செ.மீ. ஆழத்தில் அதிகளவில் பானை ஓடுகள் கிடைத்தன. அவற்றில் கைகள் மூலம் சுடுமண்ணால் நுட்பமாகச் செய்யப்பட்ட பாம்பின் தலை உருவம் ஒன்று இருந்தது. அது 6.5 செ.மீ. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மீ., தடிமன் கொண்டது.
- பாம்பின் கண்கள், வாய்ப் பகுதி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது.
பொருளாதாரம்:-

- வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 6.5 சதவீதமாகத் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
- இதனால் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது, மேலும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதால் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- மேலும் நாட்டின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதாகவும் உலகின் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறி வருவதாகவும் கூறிய ஆளுநர் சக்திகந்த தாஸ், இந்திய பொருளாதாரம் உலக வளர்ச்சியில் 15% பங்களிப்பதாகக் கூறினார்.
ரிசர்வ் வங்கி - முக்கிய குறிப்புகள்
- நிறுவப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 1,1935 (1934-ஆம் ஆண்டு சட்ட விதிப்படி)
- ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
- தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு - 1937
- தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு – ஜனவரி 1, 1949.
- இந்திய ரிசர்வ் வங்கி உருவாக முக்கிய காரணமாக இருந்த அம்பேத்கரின் புத்தகம் - `இந்திய ரூபாய் - பிரச்னைகள், தீர்வுகள்'
- மைய வங்கியை 'வங்கிகளின் வங்கி என கூறிய பொருளாதார வல்லுநர் - பி.ஏ. சாமுவேல்சன்
- இந்தியாவில் வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் பணக்கொள்கைக் குழுவின் தலைவர் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் - சக்திகாந்த தாஸ்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் - ஆஸ்போர்ன் ஸ்மித்
- ரெப்போ விகிதம் - ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம்
- ரிவர்ஸ் ரெப்போ விகிதம் - வங்கிகள், ரிசர்வ் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம்.
- தற்போது இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை - 12
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் 2023 :-

- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி- சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா
- தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளர் - சிவ்தாஸ் மீனா
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் - ஆர்.பழனிகுமார்
- தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையர் - ஷகீல் அக்தர்
- சென்னை மாவட்ட ஆட்சியர் – அருணா
- சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் - ஜெ.ராதாகிருஷ்ணன்
- தமிழக காவல் துறையின் தலைவர்(சட்டம் - ஒழுங்கு புதிய DGP) - சங்கர் ஜிவால்
- சென்னை காவல் ஆணையர் - சந்தீப் ராய் ரத்தோர்
- மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத் தலைவர் - சீமா சின்ஹா
- தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி- ஏ.கே.எஸ். விஜயன்
- பள்ளிக்கல்வி இயக்குநர் - க.அறிவொளி
- மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் - டாக்டர் ஆர்.சாந்திமலர்
- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் - எஸ்.ஆறுமுகம்
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் - கே.கலா
- எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் - நாராயணசாமி
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்- ஜெயந்தி
- கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் - B. வெங்கட்ராமன்
- முதல் பெண் யானை பராமரிப்பாளர் - பெள்ளி (ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படத்தில் நடித்தவர்)
முக்கிய நாட்கள் :-

- பசுமை எரிபொருளின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 10-ஆம் தேதி உலக உயிரி எரிபொருள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ஜெர்மனி விஞ்ஞானியான ரூடல்வ் டீசல் 1983 ஆகஸ்டு 10-ஆம் தேதி டீசல் இயந்திரத்தில் கடலை எண்ணெய்யை பயன்படுத்தி வெற்றிகரமாக இயக்கினார். அதை நினைவுபடுத்தவே இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு முதல் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உலக உயிரி எரிபொருள் தினத்தை கொண்டாடுகிறது. இந்நாளில் உயிரி எரிசக்தித் துறையில் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
முக்கிய குறிப்புகள்
- இந்தியாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு தேசிய உயிரி எரிபொருள் கொள்கை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, "உயிரி எரிபொருள் தேசிய கொள்கை-2018'-க்கு மே மாதம் 2018-இல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- இதுவரை கரும்புச் சக்கையில் இருந்து மட்டுமே எத்தனால் உள்ளிட்ட உயிரி எரிபொருள் தயாரிக்கலாம் என்ற கொள்கை தளர்த்தப்பட்டு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இனிப்புச் சோளம் போன்ற சர்க்கரை நிறைந்த பொருட்கள், மாவுச் சத்து நிறைந்த சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்ற பொருள்கள், மனித நுகர்வுக்கு பயன்படாத கோதுமை, அரிசி குருணை போன்ற உணவு தானியங்கள், அழுகிய உருளைக் கிழங்கு, சமையலுக்குப் பயன்படுத்தாத எண்ணெய் வித்துக்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், குறுகிய கால பயிர்கள் போன்றவற்றில் இருந்தும் உயிரி எரிபொருள் தயாரிக்க இந்தக் கொள்கை வகை செய்கிறது.
- அந்த வகையில் கிடைக்கும் உயிரி எரிபொருளின் மூலம் நாட்டின் எரிபொருள் தேவை சுயசார்பை நோக்கி நகர்வதுடன், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் அரசின் கொள்கையும் வெற்றியடையும்; கிராமப் புறங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- வன விலங்குகளின் வாழ்வாதாரம் குறித்து குறைந்து வரும் விழிப்புணர்வு மற்றும் சிங்கங்களின் குறைந்து வரும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கான ஆதரவை சேகரிக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
- இத்தினம் 2013-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
- தற்போது, இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் சிங்க இனங்கள் ஆபத்தான உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
- இந்தியாவில் 2015-இல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020-இன் படி 674 ஆக உள்ளது.
Tags:
Current Affairs