போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 08-09-2023
தேசியம் :-

- சர்வதேச சிறுதானிய மாநாட்டை ஒடிசா அரசு நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.
- சிறுதானிய பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
- மேலும் சிறுதானிய உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டம், ஒங்கிங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவது உட்பட அவற்றின் சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
- 2021-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து தானியங்கள் தொடர்பான தேசிய மாநாட்டில், சிறுதானிய ஊக்குவிப்பில் சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான விருதை ஒடிசா பெற்றுள்ளது.
- மேலும் சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தியதில் சிறந்த மாநிலமாக மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2022-இல் ஒடிசா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- வங்கதேசம், கென்யா, நேபாள், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுத்த முன்னெடுப்பால் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக(International Year of Millets) அறிவித்ததது.
- உலக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- உணவின்றி பசியால் வாடும் மக்களே இல்லாத நிலையை 2030-ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்பது ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளில் ஒன்று. அந்த இலக்கை எட்டும் நோக்கில் சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க 2018-ஆம் ஆண்டு இந்தியா முடிவெடுத்தது.
- 2018-ஆம் ஆண்டானது ‘தேசிய சிறுதானியங்கள் ஆண்டாக’ இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டது.
- சிறுதானியங்கள்:வரகு,சாமை,தினை,குதிரைவாலி,சோளம், கம்பு, கேழ்வரகு
- இந்தியாவில் சிறுதானிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் - ராஜஸ்தான்

- இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் கேரளா மாநிலம் வாகமண்ணில் திறக்கப்பட்டுள்ளது.
- இந்த பாலத்தில் ஒரேநேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் வரை நடக்கலாம் என்றும், இதற்காக ஓர்நபருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
- ரூ.3கோடி செலவில் 120அடி நீளத்தில் 5அடுக்கு கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
தமிழ் நாடு :-

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செப்டம்பர் 8) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” (VEERA - Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினை தொடங்கி வைத்தார்.
- இத்திட்டமானது, சாலை விபத்தில் சிக்கிய, சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் பாதிக்கப்பட்ட நபர்களை, தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்.
- இந்த முயற்சியானது இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த முயற்சியானது ஹூண்டாய் குளோவிஸ் மற்றும் இசுசூ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டமாகும்.
- மேலும், தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இந்தத் திட்டத்துக்கு தங்களது நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பை அளித்துள்ளன.
முக்கிய குறிப்புகள்
- “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48” திட்டம் - சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான திட்டம்.
- இத்திட்டம் 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- 2021-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்ட மாநிலம் - தமிழ்நாடு
- 2021-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அடிப்படையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
- 2021-ஆம் ஆண்டில் அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

- தமிழகம் முழுவதும் சூரியசக்தி பூங்கா திட்டத்தை தனியாா் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி அதன் மூலம் 2,000 மெகாவாட் திறனில் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியிட்டது.
- மின் உற்பத்தி செய்ய ஒரு மெகாவாட்டுக்கு 5 ஏக்கா் நிலம் தேவைப்படும் என்பதால், துணைமின் நிலையங்களுக்கு அருகில் நிலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் மின்வாரியம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- அதன்படி, முதல்கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூா், கரூா், சேலம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் தலா 50 முதல்100 மெகாவாட் என 2,000 மெகாவாட் திறனில் மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
- இதில், முதல் பூங்காவை திருவாரூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் :-

- தமிழ்நாடு காவல்துறையில் ரெளடிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் ‘ட்ராக் கேடி’ (Track KD app) செயலிக்கு தேசிய குற்ற ஆவண காப்பக பதக்கம் கிடைத்துள்ளது.
- தில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் சாா்பில் அண்மையில் ‘ஹக்கத்தான் மற்றும் சைபா் குற்ற சவால்கள்’ என்ற தலைப்பில் புதிதாக உருவாகும் குற்றங்களுக்கு தீா்வுகளை கண்டுபிடிப்பது தொடா்பான போட்டியில், கணினி மென்பொருள் பிரிவில், தமிழ்நாடு காவல்துறையின் ‘ட்ராக் கேடி’ செயலி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.
Track KD செயலி பற்றிய குறிப்புகள்
- இந்த செயலி நவம்பர் 25,2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- காவல்துறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த செயலியை சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான குழுவினா் உருவாக்கினா்.
- இதன் மூலம் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள், நீதிமன்றத்தால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள் ஆகியோா் கண்டறியப்பட்டு, உடனே கைது செய்யப்படுகின்றனா்.
முக்கிய நாட்கள் :-

- உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது.
- ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO-வின்) பொது மாநாட்டில் 14வது அமர்வில் அக்டோபர் 26, 1966 அன்று உலக அளவில் கல்வியறிவின்மை பிரச்சினைகளை நீக்குவதற்காக செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது.
- சர்வதேச எழுத்தறிவு தினம் முதன்முதலில் செப்டம்பர் 8,1967 இல் கொண்டாடப்பட்டது.
- இந்த ஆண்டுக்கான சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருப்பொருள்: உலகின் மாற்றத்திற்காக எழுத்தறிவை ஊக்குவிக்க வேண்டும். நிலையான மற்றும் அமைதியான சமூகத்துக்கு அடித்தளம் அமைக்க வேண்டும்.
எது எழுத்தறிவு?
- ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர்.
- எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.
- எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை.
எழுத்தறிவில் இந்தியாவின் நிலை
- 2011-கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் எழுத்தறிவு 74.04 சதவீதமாக உள்ளது.
- இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம்.
- எழுத்தறிவு சதவீதத்தில், இந்தியாவிலேயே கேரளா முதலிடத்தில் உள்ளது.
- பீகார் (63.82%) கடைசி இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் நிலை
- தமிழகத்தின் எழுத்தறிவு 80.09 சதவீதமாக உள்ளது.
- இந்தியளவில் எழுத்தறிவு சதவீதத்தில் தமிழகம் (80.09%) 14-வது இடத்தில் உள்ளது.
- ஆண்களின் எழுத்தறிவு சதவீதம் - 86.77 %
- பெண்களின் எழுத்தறிவு சதவீதம் - 73.44 %
- எழுத்தறிவு சதவீதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் - கன்னியகுமாரி(91.75%)
- கடைசி இடத்தில் உள்ள மாவட்டம் - தர்மபுரி(68.54%)

- உலக பிசியோதெரபி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்நாளில் மருந்து மாத்திரைகள் இல்லாத பக்க விளைவுகள் அற்ற பிசியோதெரபி சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
- இத்தினம் செப்டம்பர் 8, 1996 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Tags:
Current Affairs