போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 07-09-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 07-09-2023


தேசியம் :-


Card image cap

  • ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றத்துடன் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகள் செலுத்த வேண்டியது வரும். ஒன்று மாநில சட்டசபைக்குமற்றொன்று நாடாளுமன்றத்திற்கு என வாக்களிக்க வேண்டும்.
  • இந்தியாவில் 1951-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றம்சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.
  • அதன் பிறகு1968 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படத் தொடங்கியது.

அரசியலமைப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள்

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில்அரசியலமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்அவை,

  1. சட்டப்பிரிவு 83 - நாடாளுமன்ற இரு அவைகளின் பதவிக்காலம்
  2. சட்டப்பிரிவு 85 - குடியரசுத் தலைவரால் மக்களவைக் கலைக்கப்படுவது
  3. சட்டப்பிரிவு 172மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம்
  4. சட்டப்பிரிவு 174 - மாநில சட்டப்பேரவைகளைக் கலைப்பது
  5. சட்டப்பிரிவு 356 - மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி

ஒரே நாடு ஒரே தேர்தலினால் ஏற்படும் நன்மைகள்

  • தேர்தல் செலவுகள் மிச்சமாகும்
  • அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறையும்
  • அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தலாம்
  • மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில காவல் துறைகளின் உழைப்பு விரயமாவது தவிர்க்கப்படும்
  • தேர்தல் எனும் பெயரில் பொதுமக்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் பல சேவைகள் தொடரும்

இழப்புகள்

  • சட்டப்பேரவையை விட மக்களவைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன
  • மாநில மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் பின்னுக்கு தள்ளப்படலாம்
  • இதுவரை இல்லாத அளவில் பல கட்டங்களாக தேர்தலை நடத்திவேண்டி வரும்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நாடுகள்

  • பெல்ஜியம்ஸ்வீடன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுகிறது.
  • ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் இவை இந்தியாவை விட மிகச் சிறிய நாடுகள்


சர்வதேசம் :-


Card image cap
  • இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20-வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று(செப்டம்பர் 7) நடைபெறுகிறது.
  • இதேபோன்று18-வது கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெற உள்ளது.
  • இதில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
  • இன்று ஜகார்தாவில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
  • இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆசியான்-வளர்ச்சியின் மையம் என்பதாகும். ஆசியான் அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது. ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஆசியான் அமைப்பு உலக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று தெரிவித்தார்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு(Association of Southeast Asian Nations-ASEAN)

  • நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 8 ,1967
  • தலைமையகம் அமைந்துள்ள இடம் - இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா
  • ஆசியான் கூட்டமைப்பில் புருனேகம்போடியாஇந்தோனேசியாமலேசியாமியான்மர்சிங்கப்பூர்பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாஅமெரிக்காசீனாஆஸ்திரேலியாஜப்பான் உள்ளிட்டவை இக்கூட்டமைப்பில் நட்பு நாடுகளாக உள்ளது.


Card image cap

தற்போதைய பெயர்

பழைய பெயர்

பெயர் மாற்றப்பட்ட ஆண்டு

ஈரான்(Iran)

பெர்சியா(Persia)

1935

தாய்லாந்து(Thailand)

சியாம்(Siam)

1939

ஜோர்டான்(Jordan)

டிரான்ஸ்ஜோர்டான்(Transjordan)

1949

கானா(Ghana)

கோல்டு கோஸ்ட்(Gold Coast)

1957

போட்ஸ்வானா(Botswana)

பெச்சுவான்லாந்து(Bechuanaland)

1966

ஸ்ரீலங்கா(Sri Lanka)

சிலோன்(Ceylon)

1972

மியான்மர்(Myanmar)

பர்மா(Burma)

1989

காங்கோ ஜனநாயகக் குடியரசு(Democratic Republic of the Congo)

ஜைர்(Zaire)

1997

டிமோர் லாஸ்டி (Timor-Leste)

கிழக்கு டிமோர்(East Timor)

 2002

ஸ்வாத்தினி(Eswatini)

ஸ்வாஸிலாந்து(Swaziland)

2018

துர்க்கியே(Türkiye)

துருக்கி(Turkey)

2022



பொருளாதாரம் :-


Card image cap
  • நாட்டின் முதல் UPI-ATM ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ATM ஆக மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • National Payments Corporation of India (NPCI) உடன் இணைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இந்த ஏடிஎம்.
  • இப்போதைக்கு இது BHIM செயலியில் மட்டுமே இயங்குகிறது. வரும் நாட்களில் அனைத்து UPI செயலியிலும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் :-


Card image cap
  • நிலவில் ஆய்வு செய்வதற்காகவும்எதிர்கால ஆய்வுக்கு உதவும் வகையிலும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் SLIM விண்கலத்தை உருவாக்கியது.
  • இந்த SLIM விண்கலம் இன்று(செப்டம்பர் 7)ஜப்பானின் தென்மேற்கில் உள்ள ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • இந்த விண்கலம் நிலவில் பாறைகளை ஆய்வு செய்வது மற்றும் விண்கலத்தை துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளை காண்பிப்பதற்காக, 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல்மிக நுண்ணிய கேமராக்கள்நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • இந்த விண்கலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிலவில் தரையிரங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இந்த திட்டம் வெற்றி பெற்றால்நிலவை ஆய்வு  செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் வது நாடாக ஜப்பான் திகழும்.
  • நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகள் - அமெரிக்காசீனாரஷ்யா மற்றும் இந்தியா 
முக்கிய நாட்கள் :-


Card image cap
  • காற்று மாசுபாடு பூமியின் மென்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள்பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. இந்த நிலையில்காற்றுமாறுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம்(International Day of Clean Air for blue skies) கொண்டாடப்படுகிறது.
  • இத்தினம் 2020-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

Card image cap
  • போர்ச்சுக்கீசிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டு இருந்த பிரேசிலுக்கு போர்ச்சுக்கீசிய மன்னர் டாம் பெட்ரோ 1822-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி சுதந்திரம் வழங்கினார். அன்றிலிருந்து ‘பிரேசில் - போர்ச்சுக்கீஸ்’ என இரு நாடுகளிலும் போற்றப்படக் கூடிய மன்னராக பெட்ரோ கொண்டாடப்பட்டு வருகிறார்.

முக்கிய குறிப்புகள்

  • 1834-ஆம் ஆண்டு இறந்த பெட்ரோவின் இதயம் போர்ச்சுக்கீசிய நாட்டில் உள்ள தேவாலயத்தின் தங்க கலசத்தில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருளை நிரப்பி பாதுகாக்கப்படுகிறது.
  • இந்த இதயம் வருடம்தோறும் பிரேசிலின் சுதந்திர தினமான செப்டம்பர் 7-ஆம் தேசிய அன்று பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை பாரம்பரிய வழக்கமாக இரு நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன.
  • ஒவ்வோர் ஆண்டும் பிரேசில் வரும் டாம் பெட்ரோவின் இதயத்துக்கு ராணுவ மரியாதை வழங்கப்படும்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post