போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 15-09-2023
சர்வதேசம் :-

- சிங்கப்பூரின் 9-வது அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் செப்டம்பர் 14 அன்று பதவியேற்றார்.
- சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தர்மன் சண்முகரத்னம் பற்றிய குறிப்புகள்
- தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர் இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர்.
- இவர் கடந்த 2001-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்
தமிழ் நாடு :-

- தமிழகத்தை வரும் 2023-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.
- இதன் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 2024 ஜனவரி 7,8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளில் தமிழக தொழில்துறை ஈடுபட்டுள்ளது.
- இதை முன்னிட்டு,‘tngim2024.com’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், மாணவர்கள், கண்காட்சி பங்கேற்பாளர்கள் முன்பதிவு செய்து, மாநாட்டில் பங்கேற்பதற்கான அனுமதியை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் நோக்கம்
- பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்தல்
- ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருத்தல்.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிர் நலத்திட்டங்கள்
- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டம்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்
- அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்
- ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம்
- சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
- முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உதவித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்)
- பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்(விடியல் பயணம்)
- தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்-பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும் செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும்
- உழைக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுமுறையுடன் கூடிய ஊதியம்
- கர்ப்பிணிகளுக்கு சத்து மாவு உள்ளிட்ட நலப் பெட்டகம்
- தொட்டில் குழந்தை திட்டம்
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கும் திட்டம்
- பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை
- அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு
- உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
- மகளிர் சிறு வணிக கடன் திட்டம்

- பிரதம மந்திரியின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய, மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
- பிரதம மந்திரியின் விஸ்வகா்மா திட்டம் பொருளாதார ரீதியில் ஏதேனும் தாக்கத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ ஏற்படுத்துமா என்பது குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் நமது மாநிலத்துக்கு ஏற்றாற்போன்று திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது பற்றியும் குழு ஆய்வு செய்யவுள்ளது.
- இந்தக் குழு தனது அறிக்கையை 2 வாரங்களில் அரசுக்கு அளிக்கும். அதற்கு முன்பாக, விஸ்வகா்மா திட்டம் தொடா்பாக குழுவின் சாா்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கோரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா’ திட்டம்
- பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு கடனுதவி, திறன் மேம்பாடு அளிக்கும் இத்திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.
- மேலும், இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சி வரை இதில் வழங்கப்படும். அதோடு, நவீன உபகரணங்களை வாங்க ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பலனடைவார்கள்.
- இத்திட்டம் விஸ்வகர்மா ஜெயந்தியை(செப்டம்பர் 17) முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெரும் 18 பாரம்பரிய தொழில்கள் - தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல்
நியமங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- 1909- காஞ்சிபுரத்தில் உள்ள எளிமையான நெசவுக் குடும்பம் ஒன்றில் நடராசன் – பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார் அண்ணா. அவரை வளர்த்தவர், அவருக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர் அவரது சிற்றன்னையான இராசாமணி அம்மையார் ஆவார்.
- தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்வி நிறுவனங்களில் பயின்றார். பத்தாம் வகுப்பு முடித்ததும், ஏழ்மை காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாத அண்ணா, காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தாளராகச் சேர்ந்து, ஆறு மாதங்கள் பணியாற்றினார்.
- 1928- சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகை பெற்று பி.ஏ படித்தார்.
- 1934- பி.ஏ (ஹானர்ஸ்) படித்து எம்.ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) பட்டம் பெற்றார்.
- பொப்பிலி அரசர் ஆட்சிக் காலத்தில் நீதிக்கட்சியுடன் அண்ணாவுக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டதோடு இல்லாமல் பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடுகளும் அண்ணாவை வெகுவாகக் கவர்ந்து அவரை ஈடுபாடு கொள்ளச் செய்திருந்தன.
- 1935- நீதிக்கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் பெத்தநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டார் அண்ணா.
- 1935- திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதல் முதலாக சந்தித்தார் அண்ணா. அப்போது முதல் பெரியார் அண்ணாவின் தலைவரானார்.
- 1937- ஈரோடு சென்ற அண்ணா அங்கு பெரியாரின் குடியரசு, மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அண்ணாவின் திறமையைக் கண்டு வியந்த பெரியார், அதே ஆண்டு துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பை அண்ணாவுக்கு அளித்தார்.
- 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியார் அண்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு 4 மாத சிறைவாசம் விதிக்கப்பட்டது. பெரியாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது
- 1942- ‘திராவிட நாடு’ வார இதழைத் தொடங்கினார் அண்ணா.
- 1944- சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சி பெயரை “திராவிட கழகம்” என்று பெயரிடப்பட வேண்டுமென்ற சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டுவந்தார்.
- 1949 - பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தி.க. வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
- முதலில் திராவிடர் கழகத்தைப் போலவே தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கமாகவே திமுக இருந்தது. பிறகு 1957-ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் பங்கேற்று 15 எம்.எல்.ஏ.க்களை வென்றது. காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றார். இரண்டு எம்.பி.க்களும் வென்றனர்.
- ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கை கொண்டவர். மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதை கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாக முன்மொழிந்தார்.
- 1958 மார்ச் 2-ஆம் நாள், திராவிட முன்னேற்றக் கழகத்தை மாநிலக் கட்சியாக அங்கீகரித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். தேர்தல் சின்னமாக உதயசூரியனை ஒதுக்கியது.
- 1960- இந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் இவரது தலைமையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது.
- 1962-ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. ஆனால், அண்ணா தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களால் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1965- தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
- 1967 மார்ச் 6-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சரானார்.
- முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றுக்கொள்வதுதான் அதுநாள்வரை நடைமுறையில் இருந்தது. அந்த நடைமுறையை மாற்றியமைத்த அண்ணாவும் அவரது அமைச்சர்களும் ‘உளமாற’ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- 1967 ஜூலை 18-ஆம் நாள், மெட்ராஸ் ஸ்டேட் என்றும் சென்னை மாகாணம்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்வதாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- இவர் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கினார்.
- நாட்டிலேயே முதன்முறையாகத் தி.மு.க ஆட்சிக் காலத்தில் பேருந்துகள் நாட்டுடமையாக்கப்பட்டன.
- சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தார்.
- “சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை “வாய்மையே வெல்லும்” என மாற்றி அமைத்தார்.
- புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள “செக்ரடேரியட்” என்பதை “தலைமைச் செயலகம்” எனப் பெயர் மாற்றம் செய்தார்.
- ஸ்ரீ,ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு,திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச் சொற்களை அறிவித்தார்.
- 1968 - தமிழ்நாட்டில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தியது அண்ணாவின் மற்றொரு சாதனை. மாநாட்டை முன்னிட்டு ‘திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன் ஆகிய தமிழறிஞர்கள் மற்றும் கண்ணகி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் முழு உருவச் சிலைகள் சென்னை கடற்கரையில் நிறுவப்பட்டன.
- தமிழ்நாடு அரசின் கொள்கையாக இருமொழிக் கொள்கையையும்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) அண்ணா கொண்டுவந்தார்.
- 1968 - அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு உரையாற்றினார் அண்ணா.
- 1968- அண்ணாவின் தலைமைப்பண்பு, நிர்வாக நேர்மை, அரசியல் பண்பாடு ஆகியவற்றைச் சிறப்பிக்கும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது.
- 1969- அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி. என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 59-வது வயதில் மறைந்தார்
- 2009 - நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
- 2010- அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவு படுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
எழுத்துப் பணி
- 1931- ‘தமிழரசு’ இதழில் ‘பெண்கள் சமத்துவம்’ என்ற தலைப்பில் முதன்முதலாகக் கட்டுரை எழுதினார்
- 1934- அண்ணா அவர்களின் முதல் சிறுகதையான ‘கொக்கரக்கோ’, ஆனந்த விகடனில் வெளியானது.
- 1936- ‘பாலபாரதி’ என்ற இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றினார்.
- 1937- அண்ணா அவர்களின் முதற்கவிதை ‘காங்கிரசு ஊழல்’ என்ற தலைப்பில் ‘விடுதலை’ ஏட்டில் வெளியானது.
- 1937- ‘நவயுகம், விடுதலை, குடியரசு’ ஆகிய இதழ்களுக்குத் துணை ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றினார்.
- 1938- ‘பரதன்’ என்ற பெயரில் பல்வேறு தலைவர்களுக்கு விடுதலை ஏடு வாயிலாகப் பகிரங்கக் கடிதங்கள் எழுதி வெளியிட்டார்.
- 1939- அண்ணாவின் முதல் குறும் புதினமான ‘கோமளத்தின் கோபம்’ குடி அரசு இதழில் வெளியானது.
- 1940- ‘வீங்கிய உதடு’ என்கிற முதல் புதினம் குடி அரசு இதழில் வெளியானது.
- 1942- ‘திராவிட நாடு’ இதழைத் தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார்.
- 1949- டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய ‘மாலைமணி’ இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- 1953- ‘நம்நாடு’ ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.
- 1957- தனது கருத்துகள் உலகமெங்கும் பரவ வேண்டும் என்பதற்காக Home Rule (தன்னாட்சி) என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார்.
திரைப்படம்
- நல்ல தம்பி (1949) – திரைக்கதை, உரையாடல்
- வேலைக்காரி (1949) – திரைக்கதை, உரையாடல்
- ஓர் இரவு (1951) – கதை
- சொர்க்கவாசல் (1954) – திரைக்கதை, உரையாடல்
- சந்தோசம் (1955) – திரைக்கதை, உரையாடல்
- ரங்கோன் ராதா (1956) – கதை
- தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) – கதை
- நல்லவன் வாழ்வான் (1961) – திரைக்கதை, உரையாடல்
- எதையும் தாங்கும் இதயம் (1962) – திரைக்கதை, உரையாடல்
நாவல்கள்
- என் வாழ்வு(1940)- குடியரசு
- கலிங்கராணி(1943) - திராவிடநாடு
- பார்வதி பி.ஏ.(1945)-திராவிடநாடு
- தசாவதாரம்(1945)-திராவிடநாடு
- ரங்கோன் ராதா(1947)- திராவிடநாடு
முக்கிய நாட்கள் :-

- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் தேதியை சர்வதேச ஜனநாயக தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
- 'அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளித்தல்' என்பது இந்த ஆண்டுக்கான சர்வதேச ஜனநாயக தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனநாயகத்தை முன்னேற்றுவதில் இளைஞர் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலும், முடிவுகளை எடுப்பதில் அவர்களின் குரல்களும் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் இத்தகைய கருப்பொருள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.
- இத்தினம் 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது

- இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியலாளர்களில் ஒருவரான மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயாவின்' பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தாண்டின் கருப்பொருள்: நிலையான எதிர்காலத்திற்கான பொறியியல்(Engineering for a Sustainable Future)
விசுவேசுவரய்யா பற்றிய தகவல்கள்
- 1860-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
- பொறியியல் துறையில் அவர் செய்த பல்வேறு பங்களிப்புகள் மற்றும் கல்வியின் முன்னோடியாக இருந்ததால், அவர் "சர் விஎம்" என்றும் அழைக்கப்படுகிறார்.
- விஸ்வேஸ்வரய்யா தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற பின்னர், உயர் கல்விக்காக பெங்களூரு சென்று இளங்கலை படித்தார். அதன்பின்பு புனே பொறியியல் கல்லூரியில், சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
- இதையடுத்து பம்பாய் பொதுப் பணித்துறை பணியில் சேர்ந்தார். பின்னர் இந்திய நீர் பாசன ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
- 1899-ஆம் ஆண்டில் தேசிய நீர்ப்பாசன ஆணையத்தில் பணிபுரியும்போது தானியங்கி வெள்ளமடை மதகு (Automatic Weir Water Floodgates) வடிவமைத்து, அதற்கான காப்புரிமை பெற்றார்
- 1903-ஆம் ஆண்டு இவரது தானியங்கி மதகு புனே அருகே அமைந்திருந்த Khadakwasla அணையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
- விஸ்வேஸ்வரய்யா வடிவமைத்த இந்த தானியங்கி மதகுகள் சீராக செயற்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணராஜ சாகர் அணை, டைக்ரா அணை (Tigra Dam)- யிலும் நிறுவப்பட்டன.
- 1908-ஆம் ஆண்டு சுயவிருப்ப ஓய்வு பெற்ற விஸ்வேஸ்வரய்யா, தொழில்மயமான நாடுகளுக்கு உலக கல்வி சுற்றுலா மேற்கொண்டார். அதற்கு பின், ஐதராபாத் நிசாம் ஒஸ்மான் அலி கானிடம் பணியாற்றினார்.
- ஐதராபாத் நகருக்கு இவர் வெள்ளத்தில் இருந்து ஏற்படும் அபாயங்களை தடுக்க, Flood Protection System அமைத்துக் கொடுத்தார். மேலும், விசாகப்பட்டினம் துறைமுகம் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க வழிவகுத்தார்.
- 1912-ஆம் ஆண்டு மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணா ராஜ உடையார், விஸ்வேஸ்வரய்யாவை மைசூர் திவானாக அறிவித்தார். 1912 முதல் 1918 வரை மைசூரின் 19வது திவானாக பொறுப்பேற்ற விஸ்வேஸ்வரய்யா மைசூர் மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
- 1917-ஆம் ஆண்டு பெங்களூருவில் புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரியை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார். தற்போது அந்த பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.
- ஸ்ரீஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், சந்தன எண்ணெய் நிறுவனம், உலோகத் தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை, பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார்.
- கட்டுமானத்துறையில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகள் மிகவும் முக்கியமானது.
- 1934-இல் ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூலை எழுதினார். கிராமங்களைத் தொழில்மயமாக்குதல், இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும் சில நூல்களை எழுதியுள்ளார்
- 1915-ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கியது. இவரது செயல்பாடுகளை பாராட்டும் வகையில், இந்திய அரசு நாட்டின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா 1955-இல் வழங்கியது.
- ‘இந்தியப் பொறியியலின் தந்தை’ எனப் போற்றப்பட்ட எம். விஸ்வேஸ்வரய்யா 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி மறைந்தார்.
Tags:
Current Affairs