திருக்குறள் விழா - 2023 கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி விண்ணப்பிப்பது எப்படி ?
பரிசுத்தொகை :-
முதல் பரிசு ரூ. 10,000 மற்றும் கோப்பை
இரண்டாம் பரிசு ரூ. 7,500 மற்றும் கோப்பை
மூன்றாம் பரிசு ரூ. 5,000 மற்றும் கோப்பை
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் "திருக்குறள் விழா" வினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கிடையே திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பரப்பவும், மாணவர்களது எழுத்தாற்றல், பேச்சாற்றல் மற்றும் அவர்களது ஓவியத் திறனை வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை ஸ்ரீராம் குழுமம் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.
போட்டி நடத்தப்படும் முறை:
இடைநிலை / மேல்நிலை / கல்லூரி மாணவ, மாணவியருக்கு
இடையே போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டிகள் நடைபெறும் மாதங்கள்:
அக்டோபர் - நவம்பர் 2023
போட்டி நடைபெறும் இடங்கள்:
சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய கடைசி நாள்:
சென்னை, வேலூர் - 30 செப்டம்பர், 2023
தாம்பரம், புதுச்சேரி - 07 அக்டோபர், 2023
மற்ற மையங்கள் - 14 அக்டோபர், 2023
ஏதேனும் ஐயம் இருப்பின் 044-2822 0008 என்ற தொலைப்பேசி எண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய மற்றும் முழு விபரம் அறிய 👇👇
Tags:
Education News

