போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 18-09-2023
தேசியம் :-

- விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு(செப்டம்பர் 17) பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான ‘பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை’ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத்தாள், உபகரண கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார்.
- 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார்.
பிரதமரின் விஸ்வகர்மா’ திட்டம்
- பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு கடனுதவி, திறன் மேம்பாடு அளிக்கும் இத்திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.
- மேலும், இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சி வரை இதில் வழங்கப்படும். அதோடு, நவீன உபகரணங்களை வாங்க ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பலனடைவார்கள்.
- விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெரும் 18 பாரம்பரிய தொழில்கள் - தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல்

- மகாரஷ்டிரஅரசு அம்மாநிலத்தின் அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜி நகர், தாராஷிவ் என மாற்றுவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
முக்கிய குறிப்பு - மகாராஷ்டிரா
- ஆளுநர் - ரமேஷ் பயஸ்
- முதல்வர் - ஏக்நாத் ஷிண்டே
- துணை முதல்வர்கள் - அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ்
சர்வதேசம் :-

- யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரிய சின்னங்கள்’ பட்டியலில் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் சோ்க்கப்பட்டுள்ளது.
- சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்ற 45-ஆவது உலகப் பாரம்பரிய சின்னங்களுக்கான குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
- இதைத்தொடா்ந்து, இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
- பிா்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்திநிகேதன் ஒரு பல்கலைக்கழக நகரமாகும்.
- ஜாதி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் களைந்து தியானம் செய்வதற்கான ஆசிரமம், கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூரால் இங்கு நிறுவப்பட்டது.
- ரவீந்திரநாத் தாகூரால் 1921-இல் நிறுவப்பட்ட ‘விஸ்வ பாரதி கல்வி நிலையம்’ சாந்திநிகேதனில் அமைந்துள்ளது. இது சுதந்திரத்துக்கு முன் கல்லூரியாகச் செயல்பட்ட நிலையில், 1951-ஆம் ஆண்டுமுதல் மத்திய பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு செய்திகள் :-

- ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
- இதன்மூலம் 8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
- இலங்கை அணியின் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவிய மொகமது சிராஜ் சிராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
- ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடர் நாயகனாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
- ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணிகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் (8 முறை) உள்ளது.
- அதற்கடுத்த இடங்களில் இலங்கை (6 முறை), பாகிஸ்தான் (2 முறை) அணிகள் உள்ளன.

- முன்னணி தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நேற்று(செப்டம்பர் 17) நடைபெற்றது.
- இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
- போட்டியின்போது நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- செக் குடியரசு வீரர் ஜக்குப் வட்லெஜ்ச் 84.24 மீ. தூரம் எறிந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.
- நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் தங்கம், கடந்த மாதம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகின்றன.
- இதில் நேற்று(செப்டம்பர் 17) நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் இளவேனில் வாலறிவன், இறுதிப்போட்டியில் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
- பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைபோட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- முக்கிய நாட்கள் :-

- மூங்கில் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அன்றாட பொருட்களில் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
- 2009-ஆம் ஆண்டு பாங்காக்கில் எட்டாவது உலக மூங்கில் மாநாட்டில் (world bamboo congress- WBC) உலக மூங்கில் தினம் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.
- மூங்கிலை பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வதாரம் என்றும் அழைக்கபடுகின்றது. மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை(Carbon dioxide) எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராணவாயுவை (Oxygen) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்.
- மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
Tags:
Current Affairs