போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 19-09-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் (IMPORTANT CURRENT AFFAIRS) 19-09-2023


தேசியம் :-


Card image cap

  • முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • தளங்களையும் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுடையது.
  • மக்களவையில் 888 எம்.பி.க்களும்மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமர முடியும். கூட்டு அமர்வில் 1272 உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவுசக்திகர்மா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • மக்களவை அரங்கு மயில் கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. இதன்சுவர்கள்மேற்கூரை ஆகியவற்றில்மயிலின் இறகுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை அரங்கு தாமரையை கருப்பொருளாகக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற வளாகத்தின் முதன்மை நுழைவாயில் அருகே 16 அடி உயர வெண்கல காந்தி சிலை 1993-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.இந்த சிலை இப்போது இடம் மாற்றப்பட்டுபுதிய மற்றும் பழைய நாடாளுமன்றத்துக்கு நடுவில் நிறுவப்பட்டுள்ளது.
  • கட்டிடத்தின் மேற்கூரையில் 9,500 கிலோ எடை மற்றும் 6.5 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலத்தினாலான சிங்கங்களை உள்ளடக்கிய தேசிய சின்னம் இடம்பெற்றுள்ளது.
  • நுழைவுவாயிலில் அசோக சக்கரம் மற்றும் சத்யமேவ ஜெயதே பொறிக்கப்பட்டுள்ளன.
  • மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டு ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.
  • புதிய கட்டிடத்துக்கான செலவு ரூ.971 கோடி என்று கூறப்படுகிறது.கட்டிடம் கட்டி முடிக்கும்போது இந்த செலவு ரூ.1,200 கோடியாக ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது.
  • இந்த கட்டடத்தை வடிவமைத்துள்ள கட்டடக் கலைஞர் - பிமல் படேல்
Card image cap
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதாமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு(33%) இடஒதுக்கீட்டை வழங்குகிறது.
  • மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை இன்று(செப்டம்பர் 19) புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மசோதாவின் வரலாறு

  • செப்டம்பர் 1996 - இல்இந்தியாவின் அப்போதைய பிரதமர் எச். டி. தேவகவுடாவின் ஆட்சிக் காலத்தில், இந்த மசோதா முதன்முதலில் 81வது சட்டத்திருத்த மசோதாவாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால்நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
  • இந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 1996-இல் சமர்ப்பித்தது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெறுவதற்கு முன்பே மக்களவை கலைக்கப்பட்டு மசோதா ரத்து செய்யப்பட்டது.
  • பின்னர் 12-வது மக்களவையில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது.
  • அப்போதைய சட்ட அமைச்சர் எம். தம்பிதுரை நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தார்ஆனால்இந்த மசோதாவுக்கு தேவையான ஆதரவைப் பெற முடியவில்லை.
  • அதன்பிறகு1999, 2002, 2003-இல்இந்த மசோதாநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும்ஒருமுறை கூடஇந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
  • 2008 ஆம் ஆண்டில்மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ராஜ்யசபாவில் மசோதாவை அறிமுகப்படுத்தியதுஅது 186 க்கு 1 என்ற வாக்குகளில் 9 மார்ச் 2010 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • ஆனால் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படும் பட்டியலில் இந்த மசோதா ஒருபோதும் எடுக்கப்படவில்லைமேலும் 15 வது மக்களவை கலைக்கப்பட்டவுடன்இந்த மசோதாவும் காலாவதியானது.

இந்திய அரசியலில் பெண்களின் தற்போதைய நிலை

  • 1952-இல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
  • தற்போதைய 17வது மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதம்( 78 பெண் எம்பிக்கள்)
  • மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் 11 பேர் பெண்கள்
  • பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை சதவீதமாக உள்ளது.
  • மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கினால்மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 179 ஆகவும் மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகவும் உயரும்
சர்வதேசம் :-

Card image cap
  • கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
  • கர்நாடகாவின் பேலூர்ஹாலேபித் மற்றும் சோம்நாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
  • இதனால்இந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்  :-


Card image cap
  • 2018-ஆம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி காலம் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
  • இந்நிலையில்அமலாக்கத் துறையின் இடைக்கால பொறுப்பு இயக்குனராக ராகுல் நவீன் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
  • பீகாரைச் சேர்ந்த ராகுல் நவீன் 1993 பிரிவு ஐஆர்எஸ் அதிகாரி
  • புதிய இயக்குநரை முறைப்படி நியமிக்கும் வரை அவர் பொறுப்பு இயக்குநராகப் செயல்படுவார்.

அமலாக்கத்துறை(Enforcement Directorate) என்றால் என்ன?

  • நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-இல்  உருவாக்கப்பட்டது.
  • அமலாக்க இயக்குனரகம் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது.
  • இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதார சட்டத்தை அமல்படுத்துவதால் இந்த துறை அமலாக்கத்துறை என்று அழைக்கப்படுகிறது.
  • அதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அமலாக்க இயக்குநரகம் மும்பைசென்னைசண்டிகர்கொல்கத்தா மற்றும் டெல்லி என  ஐந்து பிராந்தியத்தில் அலுவலகங்களை கொண்டுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி 5 சட்டங்களை அமல்படுத்துவது என்பது இதன் முக்கியப் பணிகளாக உள்ளன.
      1. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 2002 (Prevention of Money Laundering Act)
      2. அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (Foreign Exchange Management Act)
      3. தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018 (Fugitive Economic Offenders Act)
      4. அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973 (Foreign Exchange Regulation Act)
      5. காபிபோசா சட்டம்(COFEPOSA) 1974
  • குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்புதல்சொத்துக்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இதனை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19 இன் கீழ் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முக்கிய நாட்கள்  :-


Card image cap
  • நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்தவும்சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப்டம்பர் 17-இல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • பாதுகாப்பற்ற மருத்துவம்மருந்துகளில் தவறு போன்றவை உலகில் சுகாதாரத்தில் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது.
  • 'நோயாளியின் பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
  • இந்த தினமானது 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால்(WHO) நிறுவப்பட்டது
Card image cap
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச சிவப்பு பாண்டா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • காலநிலை மாற்றத்தால் சிவப்பு பாண்டாக்கள் வாழ போராடி வருகின்றன.
  • இந்த நிலையில் சர்வதேச சிவப்பு பாண்டா தினம் இந்த இனங்கள் பற்றி அறியவும்அவற்றின் வாழ்விடத்தின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டுசெப்டம்பர் 16-ம் தேதி சர்வதேச சிவப்பு பாண்டா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • சிவப்பு பாண்டாக்கள் Firefox என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன.
  • அடர்த்தியான மரங்களுக்கு இடையே காணப்படும் இவை இமயமலையையும்தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை.
  • மேலும் இது சிக்கிமின் மாநில விலங்காகும்.


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post