போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 19-10-2023
🔘 தேசியம் :-

- பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது போல நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டம், கடந்த 2020-இல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
- இந்த அட்டைக்கு அபார் (Automated Permanent Academic Account Registry-APAAR) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த திட்டம் ‘ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை’ எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்த அபார் அட்டையில் அந்த மாணவரின் கல்வி விவரங்களும், கூடுதல் திறமைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அபார் அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் ஆதார் தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.
- இந்த அட்டைக்காக பெற்றோர்களின் அனுமதியும் அவசியமாக்கப்பட்டு உள்ளது.மேலும், பெற்றோர் அளித்த அனுமதியை எப்போது வேண்டுமாலும் வாபஸ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது
- மத்திய அரசின் அபார் அட்டை திட்டத்துக்கு சில மாநிலங்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பிரதமர் நரேந்திர மோடி, இன்று (அக்டோபர் 19) காணொலிக் காட்சி மூலம், மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களைத்(Pramod Mahajan Grameen Kaushalya Vikas Kendras) திறந்து வைத்தார். இவை, மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்படுகின்றன.
- கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக, கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும்.
- ஒவ்வொரு மையமும் குறைந்தது இரண்டு தொழிற்கல்வி படிப்புகளில் சுமார் 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
- தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தொழில் பங்குதாரர்கள் மற்றும் முகவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இந்த மையங்களை நிறுவுவதால்,மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் திறமையான மனிதவளத்தை வளர்ப்பதில் இப்பகுதி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவும்
🔴 தமிழ் நாடு :-

- சர்வதேச மீன்பிடி நிர்வாகத்தில் காலநிலை மாற்றத்தை பிரதானப்படுத்துதல் மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்த சர்வதேச மாநாடு மாமல்லபுரத்தில் அக்டோபர் 17-இல் தொடங்கியது.
- இந்த மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழகத்தில் ரூ.127 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை மத்திய அரசு அமைத்து வருகிறது என கூறினார்
- இப்பூங்கா ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது
🟠 விருதுகள் :-

- 2008-ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா., வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு அமைப்பானது முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் மூலம் நிலையான வளர்ச்சிப்பணிகளை கண்காணித்து, விருது வழங்குகிறது.
- அதன்படி,புதுப்பித்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐ.நா. அமைப்பின் மதிப்புமிகு 'முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023', தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு(Guidance TN) வழங்கப்பட்டுள்ளது.
- இதற்கான விருதினை ஐநா.,வர்த்தக வளர்ச்சி மாநாட்டின் தலைவரான ரெபேக்கா கிரிஸ்பான், அபுதாபியில் நடந்த 8-வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணுவுக்கு வழங்கினார்.
முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாடு அரசு தொழில் துறையின் அங்கமான வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதிகள் வழங்கிடும்(single window facilitation) முகமையாக செயல்பட்டு வருகிறது.
- இந்நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து வருவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.
- இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1992
🟢 பொருளாதாரம் :-

- 2024-25 சந்தை ஆண்டில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குவிண்டாலுக்கு ரூ.150 உயா்த்தப்பட்டு, ரூ.2,275-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இதேபோல், இதர ரபி பருவ (குளிா்கால) பயிா்களான பாா்லி, கொண்டைக் கடலை, மசூர் பருப்பு, கடுகு, குங்குமப்பூ ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயா்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை(Minimum Support Price) என்றால் என்ன?
- உணவு தானியங்கள், அதிகமாக உற்பத்தி ஆகும் ஆண்டுகளில் விவசாய விளை பொருட்களின் விலை குறையும். இந்த விலை திடீரென மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் இருக்கவும், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கிறது. இதுவே குறைந்த பட்ச ஆதரவு விலை.
- இவ்வாறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படும் தானியங்கள் மற்றும் பண்டங்கள், பின்னர் பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் கடைகள் வழியாக வழங்கப்படுகிறது.
- விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம்(Commission for Agricultural Costs and Prices -CACP), 1965-ஆம் ஆண்டு முதல் கரீப், ராபி என இரண்டு பருவங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பரிந்துரை செய்கிறது
- இந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு(Cabinet Committee on Economic Affairs) குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த இறுதி முடிவை எடுக்கிறது
- ஆரம்பத்தில், கோதுமை, நெல்லுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையானது, தற்போது 23 பயிர்களுக்கு வழங்கப்படுகிறது.
- சாகுபடிச் செலவு, இடு பொருட்களின் விலைகள், பயிர்களின் உற்பத்தி மற்றும் தேவை, உலகச் சந்தைகளில் பயிர்களின் விலை நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்படுகிறது.
- எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான “விவசாயிகள் ஆணையம்” (2006), பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அவற்றின் உற்பத்திச் செலவை விட 50% அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
- விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது 2018-19 பட்ஜெட்டில், குறைந்தபட்ச ஆதரவு விலையானது பயிர்களின் உற்பத்திச் செலவைவிட 50% அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது
⚪ விளையாட்டு செய்திகள் :-

- கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
- இதில் 8வது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
- இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3வது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் படைத்துள்ளார்.
- முன்னதாக கார்ல்சனை, 14 வயதில் பென்டல ஹரிகிருஷ்ணன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய இந்தியர்கள் மட்டுமே தோற்கடித்திருந்தனர்.
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- ஜெனீவாவில் ஐ.நா. மற்றும் இதர சா்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளாா்.
- 1995-ஆம் ஆண்டுப் பிரிவைச் சோ்ந்த இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரியான அரிந்தம் பாக்சி, தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலா் அந்தஸ்தில் உள்ளாா். அவா் விரைவில் தனது புதிய பதவியை ஏற்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:
Current Affairs