போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 21-10-2023
🔘 தேசியம் :-

- புயல்களுக்குப் பெயா் சூட்டும் வழக்கத்தைத் தொடங்கியவா் பிரிட்டனைச் சோ்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக் (1852-1922) என்பவா்.
- ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் எந்தவொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடும். அந்தப் புயல்களை வேறுபடுத்திக் காண்பித்து குழப்பத்தைத் தவிா்க்கவும், பேரிடா் அபாய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு புயலுக்கும் பெயா் சூட்டப்படுகிறது.
- புயலுக்கு ஒருமுறை சூட்டப்படும் பெயா் மீண்டும் பயன்படுத்தப்படாது. புயல்களுக்கான பெயா்கள் அதிகபட்சம் 8 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம். அந்தப் பெயா் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், எந்தவொரு இனத்தைச் சோ்ந்தவா்களின் உணா்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது
- இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை முதன்முறையாக 2004-ஆம் ஆண்டில் தொடங்கியது
- வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன், தாய்லாந்து, ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 13 நாடுகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
- இந்த ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா 13 புயல் பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.
- 169 பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 28-வது இடத்தில் 'முரசு' எனும் பெயரும், 93-வது இடத்தில் ‘நீர்’ என்ற பெயரும் தமிழ் பெயர்ககளும் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் புயல்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
- மேற்கிந்தியத் தீவுகளில் Hurricane (சூறாவளி)
- அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி)
- சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typhoon (சூறாவளிப் புயல்)
- மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy (வில்லி வில்லி)
🔴 விருதுகள் :-

- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள 'தோா்தோ கிராமத்தை' சிறந்த சுற்றுலா கிராமமாக உலக சுற்றுலா அமைப்பு (World Tourism Organization) கெளரவப்படுத்தியுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலக சுற்றுலா அமைப்பு -முக்கிய குறிப்புகள்
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1946
- தலைமையகம் - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்

- சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்களை சிறப்பிக்கும்வகையில் ‘மகாத்மா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
- அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது.
- விழாவில், சென்னையைச் சேர்ந்த 66 வயதான மனநல மருத்துவர் உடுப்பி கௌதம் தாஸ் உள்ளிட்ட 30 பேருக்கு ‘மகாத்மா’ விருது வழங்கப்பட்டது. விருதுகளை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் லூம்பா வழங்கினார்.
- மனநல மருத்துவர் உடுப்பி கௌதம் தாஸ் 50 ஆண்டுகளாக மனநலப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்துதல், மனநலக்கோளாறுகளை எதிர்த்துப் போராடுதல், மனநலம் குறித்த பொதுக் கல்வியாற்றுதல் மற்றும் பேரழிவு மனநலப்பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்.
🟠 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- 2025-இல் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (அக்டோபர் 21) காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
- TV- D1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவு வரை விண்கலத்தை அனுப்பி மீண்டும் தரையிறக்கப்பட்டது.
- சரியாக 16.6 கிமீ தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் இருக்கும் பகுதி தனியாகப் பிரிந்த பின்னர், பாராசூட் மூலமாக விண்கலம் மட்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் வங்கக்கடலில் இறக்கப்பட்டது. தொடர்ந்து, கடலிலிருந்து கலன் மீட்கப்படும்.
- இந்த சோதனை முடிந்ததையடுத்து, 'ககன்யான் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
🟣 முக்கிய நாட்கள் :-

- இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21-ஆம் தேதியன்று, காவலர் வீரவணக்க தினம் (Police Commemoration Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- 1959-ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியில்(லடாக்) நிகழ்ந்த மோதலில், இந்திய எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்ட வந்த 10 காவலர்கள் அக்டோபர் 21-ஆம் தேதி கொல்லப்பட்டனர்.
- இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க தினம் கொண்டாடப்படுகிறது.
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பாஜகவின் தேசிய துணை தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார்.
- அதே போல், தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக தலைவர் இந்திரா சேனா ரெட்டி நல்லு திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய குறிப்புகள்- ஆளுநரோடு தொடர்புடைய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள்
- சட்டப்பிரிவு 153 - ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொறுப்பாக ஒரே ஆளுநர் இருப்பதற்கு இவ்விதி எந்தவிதமான தடையும் கூறவில்லை.
- சட்டப்பிரிவு 154 - மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறுகிறது. நிர்வாக அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படுத்தப்படலாம்
- சட்டப்பிரிவு 155- மாநில ஆளுநர் குடியரசுத்தலைரால் நியமிக்கப்படுகிறார்
- சட்டப்பிரிவு 156- ஆளுநரின் பதவிக்காலம்
ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியிலமர்த்தப்படுவார் அல்லது குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பார் அல்லது வேறொருவர் பதவியில் அமர்த்தப்படும்வரை பதவியில் இருப்பார்.
- சட்டப்பிரிவு 157 & 158- ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவதற்கான தகுதிகள் மற்றும் அவரது பதவிக்கான வரைமுறைகள்
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- இலாபம் ஈட்டும் பதவி எதுவும் வகிக்கக் கூடாது.
- 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது.
- சட்டப்பிரிவு 159- ஆளுநரின் பதவிப்பிரமாணம்
- சட்டப்பிரிவு 161- மாநில ஆளுநர் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும், தள்ளி வைக்கவும் மற்றும் குறைக்கவும் உரித்தான அதிகாரத்தினைப் பெற்றிருக்கின்றார். எனினும், மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.(இந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு)
Tags:
Current Affairs