போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 28-10-2023
🔘 தேசியம் :-

- தைவான் நாட்டைச் சோ்ந்த விஸ்ட்ரான் குழுமம், பெங்களூரில் செயல்பட்டு வரும் தனது ‘ஐ-ஃபோன்’ கைப்பேசி தயாரிப்பு நிறுவனத்தை ரூ. 1,040 கோடிக்கு (125 மில்லியன் டாலா்) டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மின்னணு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- இந்த நிறுவனத்தில் 10,000-க்கும் அதிகமான ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தற்போது ‘ஐ-ஃபோன் 14’ ரக கைப்பேசியை தயாரித்து வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- இதன் மூலம், ‘ஐ-ஃபோன்’ தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாக டாடா வரலாறு படைக்க உள்ளது.
🔴 தமிழ் நாடு :-

- இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1.42 கோடியில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12.54 லட்சத்தில் மற்றொரு மண்டபமும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முத்துராமலிங்கதேவர் - முக்கிய குறிப்புகள்
- தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் பிறந்தார்.
- 1920-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியதில் பெரும்பங்காற்றினார்
- 1937-ஆம் ஆண்டு இராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நீதி கட்சியின் வேட்பாளரான இராமநாதபுர மன்னரை எதிர்த்து போட்டியிட்ட தேவர் மாபெரும் வெற்றிபெற்றார்.
- தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச முனைப்பு 1939-இல் நடந்தது. அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியதில் முக்கியப் பங்காற்றினார்.
- 1939-ஆம் ஆண்டு, அகில இந்திய பார்வர்டு கட்சியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கியபோது அவரோடு இணைந்து செயல்பட்டார்
- ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு(INA) தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும்.
- 1952 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் (AIFB) தேசிய துணைத் தலைவராக பணியாற்றினார்.
- அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியில் பணியாற்ற தொடங்கிய முத்துராமலிங்க தேவர் தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்வானாா்(1952, 1957, 1962).
- தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 55-வது வயதில் (1963) தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.
🟡 சர்வதேசம் :-

- இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது.
- 'பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை கடைப்பிடித்தல்' எனத் தீர்மானத்துக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
- தீர்மானத்துக்கு ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.
- இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.
🟣 முக்கிய நாட்கள் :-

- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ஆம் தேதி சர்வதேச அனிமேஷன் தினமாக கொண்டாடப்படுகிறது.
- அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக “சர்வதேச அனிமேஷன் தினம்” கொண்டாடப்படுகிறது.
- அக்டோபர் 28,1892 அன்று பிரான்சின் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன் முதலில் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.
- யுனெஸ்கோவின் ஒரு அங்கமாக திகழும் சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம், 2002-ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத
⚪ விளையாட்டு செய்திகள் :-

- 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டி போட்டிகளின் முடிவில் இந்தியா 111 பதக்கங்களை(29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம்) வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- மேலும், பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
- பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும்.
- இதற்கு முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா 72 பதக்கங்களை வென்றிருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
- இந்தப் பட்டியலில் சீனா 521 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- திருநெல்வேலி மாநகர காவல்துறையின் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார்.
- இவர் பி.இ., மற்றும் எம்.எஸ் (ஐடி) முதுநிலை பட்டம் பெற்றவர்.
- இவர் நெல்லை மாநகர காவல்துறையின் முதல் பெண் ஆணையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Current Affairs