போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 01-11-2023
🔘 தேசியம் :-

- இந்திய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 3 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து இன்று(நவம்பர் 1) தொடங்கி வைத்தனர்.
வளர்ச்சித் திட்டங்கள்
1. அகௌரா - அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்பு
- 15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகௌரா வரை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவிலும், 10 கிலோ மீட்டர் வங்கதேசத்திலும் ரயில் பாதை இருக்கும். 2 நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்துக்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
2.குல்னா - மோங்லா துறைமுக ரயில் பாதை
- இந்தத் திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள ரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது.இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா அகல ரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.
3.மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் அலகு - II
- 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதி திட்டத்தின் கீழ் மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையம் ஆகும்.
🌍 சர்வதேசம் :-

- தென்கிழக்கு ஆசிய நாடு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் தாய்லாந்துக்கு ‘விசா’ இல்லாமல் 2023 நவம்பா் 10 முதல் 2024 மே 10-ஆம் தேதி வரை பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம்.
முக்கிய குறிப்புகள்
- தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
- அந்த நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடி பேர் சுற்றுலாவினால் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
🔴 தமிழ் நாடு :-

'இந்தியாவில் சாலை விபத்துகள்-2022' என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி,
- 2022-ஆம் ஆண்டில் நாடு முழுதும் பதிவான மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை - 4,61,312
- உயிரிழந்தோர் எண்ணிக்கை - 1,68,491
- காயமடைந்தோர் எண்ணிக்கை - 4,43,366
- சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் முதலிடத்திலுள்ள மாநிலம் - தமிழகம்(64,105 விபத்துகள்)
- சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் முதலிடத்திலுள்ள மாநிலம் - உத்தரப் பிரதேசம்
- 2021-ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், உயிரிழப்பு 9.4 சதவீதமும், காயமடைவது 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.
🟢 பொருளாதாரம் :-

- 2022-ஆம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- இதைத் தொடர்ந்து, பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.
- 2016-இல் ஒரு மில்லியனாக இருந்த UPI (Unified Payments Interface) பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டியுள்ளது.
- இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
- இந்த வகையில், UPI முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர்.

- நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (GST) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 13 சதவீதம் அதிகமாகும்.
- நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சம் கோடி வசூலான நிலையில், இரண்டாவது அதிகபட்ச தொகையாக அக்டோபரில் வசூலாகியிருக்கிறது.
- கடந்த ஆண்டு மொத்த GST ரூ.8,93,334 கோடி வசூலாகியிருந்து; சராசரி மாத வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது.
GST பற்றிய முக்கிய குறிப்புகள்
- GST நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜூலை 1, 2017
- GST- யில் உள்ள அடுக்குகள் - 5 அடுக்குகள் / விகிதங்கள் (0%, 5%, 12% 18% மற்றும் 28%)
- GST அமைப்பை வடிவமைத்த குழு- அசிம் தாஸ் குப்தா
- GST அமைப்பை அமல்படுத்த பரிந்துரைத்த குழு - விஜய் கேல்கர்
- GST - ஐ நடைமுறைப்படுத்திய அரசியலமைப்புச் திருத்தசட்டம் – 101(2016)
- GST கவுன்சில் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு -279 A
- GST கவுன்சில் தலைவர் - மத்திய நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்)
- GST- ஐ முதலில் ஏற்றுக்கொண்ட மாநிலம் - அசாம்
- GST - ஐ முதலில் அறிமுகப்படுத்திய நாடு - பிரான்ஸ் (1954)
- தற்போது இந்தியாவில் உள்ள ‘இரட்டை வரி’ GST அமைப்பு எந்த நாட்டை பின்பற்றி அமைக்கப்பட்டது – கனடா
🟠 விருதுகள் :-

- பிரிட்டிஷ் அகாதெமி புத்தக விருது, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து உலக கலாச்சாரங்களைப் பற்றி எழுதப்படும் சிறந்த நூல்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த அண்டு சிறந்த புத்தகமாக நந்தினி தாஸ் எழுதிய ‘Courting India : England, Mughal India and the origins of empire’ என்ற நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இந்த விருதுடன் நந்தினிதாஸ் ரூ.25 லட்சம் ரூபாயைப் பரிசாகப் பெறுகிறார்.
- இந்தியாவில் பிறந்து வளர்ந்த நந்தினி தாஸ், தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
🟣 முக்கிய நாட்கள் :-

- நவம்பர் 1,1956 - மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், பம்பாய், ஜம்மு & காஷ்மீர், கேரளம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம், ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் இந்தியா ஒன்றியம் பிரிக்கப்பட்டது.
- மே 1,1960 - பம்பாய் மாநிலம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டது(15-வது மாநிலம்)
- டிசம்பர் 1,1963 - நாகலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது(16-வது மாநிலம்)
- நவம்பர் 1,1966- பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரித்து ஹரியானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது(17-வது மாநிலம்)
- ஜனவரி 25,1971- ஹிமாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது(18-வது மாநிலம்)
- ஜனவரி 21,1972- மணிப்பூர், திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்றும் தனித்தனி மாநிலங்களாக உதயமாயின(19,20 & 21-வது மாநிலம்)
- மே 16,1975 - சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டது(22-வது மாநிலம்)
- பிப்ரவரி 20,1987 - மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது(23 & 24 -வது மாநிலம்)
- மே 30,1987 – கோவாவிற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது (25-வது மாநிலம்)
- நவம்பர் 1, 2000 - மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் தனி மாநிலமானது(26-வது மாநிலம்)
- நவம்பர் 9, 2000 - உத்தர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு உத்தரகாண்ட் தனி மாநிலமானது(27-வது மாநிலம்)
- நவம்பர் 15, 2000 - பீஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் தனி மாநிலமானது(28-வது மாநிலம்)
- ஜூன் 2 ,2014 -ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலமானது(28-வது மாநிலம்)
- அக்டோபர் 31, 2019 - தனி மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது
- 26 ஜனவரி 2020 - டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் ஒரே யூனியன் பிரதேசமாக ஒன்றிணைக்கப்ட்டது
- தற்போது இந்திய ஒன்றியத்தில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளது
Tags:
Current Affairs