போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 06-11-2023

போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 06-11-2023


🔘 தேசியம் :-


Card image cap

  • பாரத் ஆட்டா என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (நவம்பர் 6) தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக 100 நடமாடும் விற்பனை (வேன்கள்) மையங்களைத் தொடக்கி வைத்தார்.
  • இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் கீழ் இந்த நடமாடும் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • இதனை மானிய விலையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50 காசுகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Card image cap
  • தேசிய உணவு பாதுகாப்புசட்டத்தின் கீழ்அந்தியோதயா அன்ன யோஜனா குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்தது.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தி அதனை தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்துடன் மத்திய அரசு இணைத்தது. 
  • இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
  • அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது.
  • தற்போது இதனை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதுஇதன்மூலம் 81.35 கோடி மக்கள் பயனடைவர்.

முக்கிய குறிப்பு

  • 2013 ஆ‌ம் ஆ‌ண்டு இந்திய நாடாளுமன்றத்தா‌ல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

🔴 தமிழ் நாடு :-


Card image cap

  • வேளாண்மை - கலித்தொகை 101, திருக்குறள் 81
  • உழவர் - நற்றிணை 4
  • பாம்புகுறுந்தொகை-239
  • வெள்ளம் - பதிற்றுப்பத்து-15
  • முதலை- குறுந்தொகை-324
  • கோடைஅகநானூறு-42
  • உலகம்தொல்காப்பியம்கிளவியாக்கம்- 56 திருமுருகாற்றுப்படை-1
  • மருந்துஅகநானூறு-147, திருக்குறள் 952
  • ஊர்தொல்காப்பியம்அகத்திணையியல் -41
  • அன்பு- தொல்காப்பியம்களவியல் 110, திருக்குறள் 84
  • உயிர்தொல்காப்பியம்கிளவியாக்கம்- 56, திருக்குறள் 955
  • மகிழ்ச்சி- தொல்காப்பியம்கற்பியல்-142, திருக்குறள் 531
  • மீன்- குறுந்தொகை 54
  • புகழ்தொல்காப்பியம்வேற்றுமையியல் 71
  • அரசு- திருக்குறள் 554
  • செய்- குறுந்தொகை 72
  • செல்- தொல்காப்பியம், 75 புறத்திணையியல்
  • பார்- பெரும்பாணாற்றுப்படை, 435
  • ஒழி- தொல்காப்பியம்கிளவியாக்கம் 48
  • முடி- தொல்காப்பியம்வினையியல் 206


🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-


Card image cap

  • RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற உதவும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று (நவம்பர் 6) பதவியேற்றுக் கொண்டார்.
  • 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள முதல் தலித் நபர் என்ற பெருமையை ஹீராலால் சமாரியா பெற்றுள்ளார்.

முக்கிய குறிப்புகள்

  • தகவல் அறியும் உரிமை சட்ட விவகாரங்களில் உயர் அதிகாரம் கொண்ட தலைமை தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர், 10 ஆணையர் பதவிகள் உள்ளன.
  • மத்திய தகவல் ஆணையம் பணியாளர் அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
  • பிரதமர்மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களின் பதவிக் காலம் - 3 ஆண்டுகள்


⚪ விளையாட்டு செய்திகள் :-


Card image cap

  • பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் ஒற்றையா் போட்டி இறுதிச்சுற்றில் உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்,6-4, 6-3 என்ற நோ் செட்களில்பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.
  • இது இவர் பெரும் 7-வது பாரீஸ் மாஸ்டா்ஸ் பட்டமாகும்
  • குறிப்பு:  நோவக் ஜோகோவிச் ஏற்கனவே அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்(24 முறை)

🟣 முக்கிய நாட்கள் :-


Card image cap

  • 2015-ஆம் ஆண்டு டிசம்பரில்ஐக்கிய நாடுகளின் பொது சபை நவம்பர் 5 ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
  • அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.
  • இத்தினத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்:'Fighting Inequality for a Resilient Future'.

முக்கிய தகவல்கள்

  • சுனாமி என்பது ஜப்பானிய மொழி சொல். தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. 
  • கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போது சுனாமி உருவாகிறது.
  • உலகில் 100 ஆண்டுகளில் 58 முறை சுனாமி ஏற்பட்டுள்ளது. இதில் 2.60 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
  • 2004-இல் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாக்கிய சுனாமியில் 2.27 லட்சம் பேர் பலியாகினர்.


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post