போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 07-11-2023
🌍 சர்வதேசம் :-

- சென்னை IIT தான்சானியா நாட்டின் சான்சிபாரில் தனது சா்வதேச வளாகத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சா்வதேச வளாகம் ஒன்றைத் தொடங்கும் நாட்டின் முதல் IIT என்ற பெருமையை சென்னை IIT பெற்றுள்ளது.
- இதனை சான்சிபாா் அதிபா் டாக்டா் ஹுஸைன் அலி மின்யி சான்சிபாரிலிருந்து நவம்பர் 6 அன்று திறந்து வைத்தாா்.
- இதில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் நான்காண்டு இளநிலை அறிவியியல் (பிஎஸ்) படிப்பும்; தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இரண்டாண்டு முதுநிலை தொழில்நுட்பப் படிப்பும் (எம்.டெக்) தொடங்கப்படுகிறது.
- இந்தியாவின் உயா்தரக் கல்விமுறையை சா்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்லும் இந்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- டெல்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, ராஜஸ்தான் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மசீ, குவாஹாட்டி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கௌல், சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
- இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், உச்ச நீதிமன்றத்தின் 31 நீதிபதிகளின் எண்ணிக்கை 34 -ஆக (முழு எண்ணிக்கை) அதிகரிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் - முக்கிய குறிப்புகள்
- உச்சநீதிமன்றம் செயல்பட தொடங்கிய ஆண்டு - ஜனவரி 28,1950
- இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு பதிலாக உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
- உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டில் இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை - 8
- தற்போதுள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை - 34 (1 தலைமை நீதிபதி + 33 நீதிபதிகள்)
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரம் உள்ள அமைப்பு - நாடாளுமன்றம்
- உச்சநீதிமன்றதின் முதல் தலைமை நீதிபதி - ஹெச்.ஜே.கனியா
- உச்சநீதிமன்றதின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி(1989)
- தற்போதைய தலைமை நீதிபதி(50-வது) - டி.ஒய். சந்திரசூட்
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு- 124(2)
- உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர்- குடியரசு தலைவர்
- உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் தகுதி - 5 ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ 10 ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவோ பணியாற்றியிருக்க வேண்டும்.
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது - 65
⚪ விளையாட்டு செய்திகள் :-

- நடப்பு சையத் முஷ்தாக் அலி கிரிக்கெட் போட்டியின் இறுதிப் ஆட்டத்தில் பரோடோ அணியை 20 ரன்களில் வீழ்த்தியது பஞ்சாப் அணி.
- இதன் மூலம் பஞ்சாப் அணி முதல் முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
🟣 முக்கிய நாட்கள் :-

- புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு செய்ய தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7-ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
- புற்றுநோயைத் தடுப்பது மற்றும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்' அனுசரிக்கப்படுகிறது
- புற்றுநோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சைக்கு அடித்தளமிட்டவர் பிரான்சின் மேரி கியூரி, இவரது பிறந்த தினமான நவம்பர் 7, மத்திய அரசு சார்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- இத்தினம் 2014 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

- திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அறிவியல் அறிஞர் சர்.சந்திரசேகர் வெங்கட்ராமன் 1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி பிறந்தார்.
- 1904-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1907-இல் அதே கல்லூரியில் முதுகலை படிப்பையும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
- 1907-ஆம் ஆண்டு நடைபெற்ற நிதித்துறை தேர்வில் முதலிடம் பெற்று கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறையில் தலைமை அலுவலராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
- நிதித்துறை பணியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் 1917-ஆம் ஆண்டு அப்பணியை விட்டு விலகி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார்.
- 1933-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் இயக்குநராக பணியாற்றினார். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முதல் இயக்குநரும் இவரே.
- இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1948-ஆம் ஆண்டு தொடங்கினார். இங்கு இறுதிக் காலம் வரை பணியாற்றிய ராமன், தனது 82-வது வயதில்(1970) காலமானார்.
ராமன் விளைவு
- ராமன் விளைவு ஒளியின் அலைநீளத்தில்(wavelength) ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. அதாவது ஒளிக்கற்றை ஒரு தூசியற்ற சாதனத்திற்குள் நுழைந்தால் அதன் ஒளிக்கற்றிலிருந்து சிறிய அளவிலான ஒளிசிதறல்கள் ஏற்படும். இந்த சிறிய ஒளிசிதறல்களின் அலைநீளம் உள்ளே அனுப்பப்பட்ட ஒளியின் அலைநீளத்தில் இருந்து சற்று மாறுபடும். இந்த மாற்றத்தை தான் ராமன் விளைவாக சி.வி.ராமன் பிப்ரவரி 28,1928-இல் கண்டுபிடித்தார்.
- ராமன் விளைவு நினைவாக பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்தியா அரசு 1986 ஆம் ஆண்டில் அறிவித்தது.
- இந்த கண்டுபிடிப்புக்காக 1930-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, இவருக்கு லண்டனில்உள்ள ராயல் சொசைட்டியின் ‘ஃபெல்லோஷிப்’ (1924), பிரிட்டிஷ் அரசால் இவருக்கு நைட் ஹூட் பட்டம், சர் பட்டம்(1929) அளிக்கப்பட்டது.
- அதேபோல், இத்தாலி நாட்டின் உயர் பதக்கமான ‘மேட்யூச்சி’, மைசூர் அரசரால் ராஜ்சபாபூசன் பட்டம் (1935), பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின் பதக்கம் (1941), இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது (1954), உலக லெனின் பரிசு (1957) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பதக்கங்களையும், விருதுளை அவர் பெற்றுள்ளார்.
🔵 இராணுவம் :-

- இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் 74 சதவீத அந்நிய முதலீடுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
- 2015-ஆம் ஆண்டு முதல் சில முக்கியமான தயாரிப்புகளுக்கு மட்டும் 100% அந்நிய முதலீடுக்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும், இதுவரையில் எந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கும் 100% முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதில்லை.
- இந்நிலையில் முதன்முறையாக சுவீடனை சேர்ந்த ‘சாப்’ (Saab) நிறுவனத்துக்கு 100% அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து ‘சாப்’ நிறுவனம் ஹரியாணாவில் ரூ.500 கோடி முதலீட்டில் ஆலையை நிறுவ உள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Current Affairs