போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் |
IMPORTANT CURRENT AFFAIRS - 09-11-2023
🔘 தேசியம் :-

- உத்தர பிரதேசத்தின் "அலிகர்" நகரம், ‘ஹரிகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அலிகர் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
- மாநகராட்சியின் இந்த முடிவு முதல்வர் யோகிக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேச அரசு இதனை ஏற்றுக்கொண்டு அலிகர் பெயரை மாற்றும் அறிவிப்பை விரைவில் வெளியிடும்.
- மேலும் இதுபோல, உத்தர பிரதேசத்தின் இரண்டு முக்கிய நகரங்களான ஆக்ராவை அகர்வால் அல்லது அக்ரஹான் எனவும், முசாபர்நகரை லஷ்மி நகர் எனவும் மாற்றவேண்டும் என கோரிக்கை உள்ளது
- குறிப்பு- ஒரு மாநகராட்சி தன் நகரின் பெயர் மாற்றத்திற்காக தனது பரிந்துரையை அளிக்க முடியும். இதை ஏற்று அங்கீகரிக்க வேண்டி, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் அலுவலகங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைக்கும். அதன் பிறகே அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இதுவரை பெயர் மாற்றப்பட்ட முக்கிய நகரங்கள்
உத்தர பிரதேசம்
- பைசாபாத்- அயோத்யா
- அலகாபாத்- பிரயாக்ராஜ்
- முகல்சராய் - தீன்தயாள் உபாத்யாயா நகர்
மகாராஷ்டிரா
- அவுரங்காபாத் - சத்ரபதி சம்பாஜி நகர்
- உஸ்மானாபாத் - தாராஷிவ்
மத்திய பிரதேசம்
- ஹோஷாங்காபாத் - நர்மதாபுரம்
ஹரியானா
- குர்கான் - குருகிராம்

- கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த பி. பாலசுப்ரமணியன் மேனன் (97 வயது) என்பவா் 73 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.
- இதையடுத்து நீண்ட நாள்களாக வழக்குரைஞராக பணியாற்றி வரும் நபா் என்ற பெருமையை பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாா்.
- மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து 1950-ஆம் ஆண்டு முதல் பாலசுப்ரமணியன் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

- இயற்கை வேளாண் விளைப்பொருள்களை விற்பனை செய்ய ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ என்ற வா்த்தகப் பெயரை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா நவம்பர் 8 அன்று அறிமுகம் செய்துவைத்தாா்.
- ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ வா்த்தகப் பெயரின் கீழ், இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சா்க்கரை, ராஜ்மா, பாசுமதி அரிசி, சோனாமசூரி அரிசி ஆகிய 6 பொருள்கள் விற்பனை செய்யப்படும். அவை தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான மதா் டைரியின் 150 விற்பனையகங்கள், இணையவழி தளங்களில் விற்கப்படும்.
- ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும் பொருள்கள் வருங்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌍 சர்வதேசம் :-

- பிரிட்டனைச் சோ்ந்த ‘Quacquarelli Symonds (QS)’ தரவரிசை நிறுவனம், உயா்கல்வி நிறுவன பேராசிரியா்களின் ஆய்விதழ் சமா்ப்பிப்பு, கல்வி நிறுவனத்தின் கல்வி முறை மற்றும் ஊழியா்களுக்கான மதிப்பு, ஆசிரியா் - மாணவா் விகிதாச்சாரம் ஆகிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலக அளவில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை நவம்பர் 8 அன்று வெளியிட்டது.
- 25 நாடுகளைச் சேர்ந்த 856 நிறுவனங்களைக் கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலில், ஆசியாவில் இப்போது அதிக பிரதிநிதித்துவம் பெற்ற உயர்கல்வி முறையாக இந்தியா உள்ளது.
- கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 37 உயா் கல்வி நிறுவனங்களுடன் மொத்தம் 148 இந்திய உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
- இந்தியாவுக்கு அடுத்து 133 உயா்கல்வி நிறுவனங்களுடன் சீனாவும், 96 உயா்கல்வி நிறுவனங்களுடன் ஜப்பானும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 148 உயா்கல்வி நிறுவனங்களில், மும்பை ஐஐடி முன்னிலை பெற்றுள்ளது.
- மேலும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), ஐஐடி சென்னை, ஐஐடி தில்லி, ஐஐடி கான்பூா், ஐஐடி காரக்பூா், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவை ஆசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.
🔴 தமிழ் நாடு :-

திருமுறைகள் | நூல்கள் | ஆசிரியர்கள் |
முதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை
| தேவாரம் | திருஞான சம்பந்தர் |
நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை
| தேவாரம் | திருநாவுக்கரசர் |
ஏழாம் திருமுறை | தேவாரம் | சுந்தரர் |
எட்டாம் திருமுறை
| திருவாசகம், திருக்கோவையார் | மாணிக்கவாசகர் |
ஒன்பதாம் திருமுறை
| திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
| திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் |
பத்தாம் திருமுறை | திருமந்திரம் | திருமூலர் |
பதினோராம் திருமுறை
| 40 நூல்களின் தொகுப்பு | காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் |
பன்னிரண்டாம் திருமுறை
| திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) | சேக்கிழார் |
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- மத்திய புலனாய்வு அமைப்பின்(CBI) இணை இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி வி.சந்திரசேகரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
- பதவியேற்ற நாளில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு அல்லது இதுகுறித்து அடுத்த உத்தரவு வரும்வரை அவர் இப்பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBI அமைப்பு உருவான வரலாறு
- இரண்டாவது உலகப் போரின்போது, போருக்குத் தேவையான கொள்முதல்களில் லஞ்சம், இதர முறைகேடுகள் நடந்ததால் அரசு ஊழியர்களை விசாரிக்கத் போர்த்துறையில்(War & Supply Department) தனி அமைப்பாக சிறப்பு போலீஸ் நிர்வாகம் (Special Police Establishment (SPE) ஒன்று 1941-இல் ஏற்படுத்தப்பட்டது.
- 1946-இல், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் அமையும் வகையில், டெல்லி சிறப்பு போலீஸ் நிர்வாகச் சட்டத்தை அரசு நிறைவேற்றியது. காலப்போக்கில், SPE-யிடம் மேலும் மேலும் வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன.
- 1.4.1963-இல் உள்துறை அமைச்சகத் தீர்மானத்தின் மூலம், பணியாளர் துறையின் கீழ் SPE-யை CBI- யாக உருமாற்றம் செய்தது இந்திய அரசு. இத்தனை ஆண்டுகளில், பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு விஷயங்களைக் கையாளும் விசாரணை அமைப்பாக படிப்படியாக CBI விரிவாக்கம் செய்யப்பட்டது.
- ஆரம்பகாலங்களில் மத்திய அரசு ஊழியர்களின், ஊழல் விவகாரங்களை மட்டும் விசாரித்த இந்த அமைப்பு, பின்னாளில் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், மிக முக்கியமான ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், பயங்கரவாதச் செயல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நாட்டின் முன்னணி விசாரணை நிறுவனமாக ‘மத்தியப் புலனாய்வு அமைப்பு’ (CBI) மாறியது.
CBI -யின் உள்கட்டுமானம்
- CBI மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வராது. பணியாளர் நலத் துறையின் கீழ்தான் வருகிறது.
- தலைமையகம் டெல்லியில் இருக்கிறது.
- இதன் சார்பு அமைப்பான சிபிஐ அகாடமி என்ற பயிற்சிப் பிரிவு உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ளது.
CBI பிரிவுகள்
- ஊழல் விசாரணைப் பிரிவு (Anti-Corruption Division)
- சிறப்புக் குற்றச் செயல்கள் பிரிவு (Special Crimes Division)
- பொருளாதாரக் குற்றங்கள் பிரிவு (Economic Offences Division)
- கொள்கை – சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்கள்
- CBI நிர்வாகம்
- வழக்கு விசாரணை இயக்குநரகம்
🟣 முக்கிய நாட்கள் :-

- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9-ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- 1987- ஆம் ஆண்டு பாராளமன்றத்தால் சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- இந்த சட்டமானது 09.11.1995 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த தினமே சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39 A பிரிவு உறுதி செய்கிறது. இதை உறுதிசெய்யவே மேற்சொன்ன சட்டமானது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
Tags:
Current Affairs