அமெரிக்க விடுதலைப் போர்-அறிமுகம்

 அமெரிக்க விடுதலைப் போர்


அறிமுகம்

   பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற 3 மாபெரும் புரட்சிகள் மேலைச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. அவை அமெரிக்க புரட்சி பிரெஞ்சு புரட்சி தொழிற்பயிற்சி ஆகியனவாகும். இவற்றுள் அமெரிக்கப் புரட்சியே முதல் அரசியல் புரட்சியாகும். அமெரிக்க புரட்சி ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதே ஜெபர்சன் 1776 ஆம் ஆண்டு ஜூலையில் தனது "சுதந்திரப்பிரகடனத்தை" 13 குடியேற்ற நாடுகள் பங்கேற்ற 'கண்டங்களின் மாநாட்டில்'  மனிதர்கள் அனைவரும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளார்"என ஏற்கச்செய்தார்.

ஐரோப்பிய சக்திகளின் குடியேற்றங்கள்

           போர்த்துக்கீசியர், ஸ்பானியர் ஆகியோரை புதிய நிலப்பரப்புக் காண்பதற்கான கடலாய்வு பயணங்களை மேற்கொண்டதிலும் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியதிலும் முன்னோடிகள் ஆவர்1497 ஆம் ஆண்டு ஜான் கோபட் என்பவர் வட அமெரிக்காவின் நோவா ஸ்காட்டியா கடற்கரையை ஒட்டி மேற்கொண்ட கடல் பயணத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர் வட அமெரிக்காவின் தலை நிலப்பகுதியின் மீது பெயரளவில் உரிமை கொண்டாடினார்கள். ஆனால் இவ்வுரிமையை உறுதிப்படுத்தும் வழிமுறைகளையோ  விருப்பத்தையோ இங்கிலாந்து 16 ஆம் நூற்றாண்டில் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இங்கிலாந்து நிறுவிய முதல் குடியேற்றம் ஜேம்ஸ்டவுன் (1607) என்பதேயாகும்.

பியூரிட்டானியர் குடியேற்றங்கள்


         இங்கிலாந்தின் பிளைமவுத் நகரிலிருந்து புராட்டஸ்டண்ட் மதப் பிரிவைச் சார்ந்த பியூரிட்டானியர் என்னும் ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு மேபிளவர் என்னும் கப்பல் 1620 இல் அமெரிக்கா வந்தது. வட அமெரிக்காவில் இறங்கியவர்கள் இவ்விடத்தை புதிய பிளைமவுத் என்று அழைத்தனர்.பியூரிட்டானியர்குழுவினர் ஜான் வின்திராப் என்பவரின் தலைமையில் மாசாசூசட்ஸ் குடியேற்றத்தை நிறுவினார்.பியூரிட்டானியருக்கு முன்னரே பல குழுக்களை சேர்ந்தவர்கள் வட அமெரிக்க கிழக்கு கடற்கரை ஏனைய பகுதிகளில் குடியேறினர். பென் என்ற குவேக்கரால் நிறுவப்பட்ட குடியேற்றம் அவரின் பெயரால் பென்சில்வேனியா என அழைக்கப்பட்டது.டச்சுக்காரர் அமெரிக்காவின் நியூஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் ஒரு நகரத்தை நிறுவினார். பின்னர் இது ஆங்கிலேயரால் நியூயார்க் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. நாளடைவில் ஜெர்மானியர் டேனியல் பிரெஞ்சுக்காரர் ஆகியோரும் குடியேறினர்.


அமெரிக்கவின் கிழக்கு கடற்கரையிலிருந்த 13 குடியேற்ற நாடுகள்

       அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் இருந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.



TO ATTEND THE QUIZ





1 Comments

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post