🎊தினம் ஒரு தகவல்🎊
🕰ஐசோடோப்புகள் :
▪️ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைப் பெற்றிருக்கலாம்.
▪️அத்தகைய அணுக்கள் ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன.
▪️அவை ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன.
▪️உதாரணமாக
ஹைட்ரஜன் அணுவானது மூன்று ஐசோடோப்புகளை பெற்றுள்ளன.
▪️அவை - ஹைட்ரஜன் (1H1), டியூட்ரியம் (1H2), டிரிட்டியம்(1H3).
🕰ஐசோபார்கள் :
▪️ஒரே நிறை எண்ணையும்
வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும் .
▪️(எ.கா) கால்சியம் – 40, ஆர்கான் - 40.
Tags:
articles