சோசியல் மீடியாவில் இப்போது ஆப்டிகல் இல்யூஷனுக்கான அதே இடத்தை பிரெயின் டீசர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.
ஆப்டிக்கல் இல்யூஷன்கள், பிரெயின் டீஸர் என இரண்டுமே கண்களுக்கும், மூளைக்கும் ஓரே நேரத்தில் அதிக வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன.
ஆனால் பிரெயின் டீஸர்கள் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன.
பிரெயின் டீஸர் சவால்களை தீர்ப்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நம்முடைய நினைவாற்றலை வலுவாக வைத்திருக்கிறது.
தவிர சவாலில் இறங்கும் நபரை மிகவும் சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக வைக்கிறது.
பிரெயின் டீசர்களில் மறைந்திருக்கும் புதிருக்கான விடையை கண்டுபிடிப்பவர்கள்
எந்த விஷத்தையும்
பிறரை விட வேறு கோணத்தில்
சிந்திக்கக்கூடியவர்கள், ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ என சொல்லக்கூடிய தீர்வுகளை கண்டறிய வழக்கமான வழிகளை சிந்திக்காமல் பல
கோணங்களில் சிந்திக்கும் திறன்
படைத்தவர்களாக இருப்பார்கள்.
இன்று முற்றிலும் சுவாரஸ்யமான ஒரு பிரெயின் டீசரைக் கொண்டு
வந்துள்ளோம், அதில் வீட்டில்
ஓய்வறையில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை 9 விநாடிகளுக்குள் கண்டறிய வேண்டும் என சவால் விடுக்ப்பட்டுள்ளது.
இன்றைய பிரெயின் டீசர் புகைப்படத்தில், குடும்பத்தினர் அனைவரும் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் கழிப்பதற்காக லிவ்விங் ரூமில் கூடியுள்ளனர். அந்த புகைப்படத்தில் அப்பா, அம்மா இருவரும் சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கின்றனர். மகன் மற்றொரு சோபாவில் படுத்துக்கொண்டும், மகள் கீழே படுத்தபடியும் அவர் அவருக்கு பிடித்த புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கின்றனர். அந்த குடும்பத்தினரின் செல்ல நாய் மற்றும் பூனைக்குட்டி கூட லிவ்விங் ரூமில் தான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்படி அனைவரும் ஒன்று கூடியிருக்கும் இந்த அறையில் 6 ஆங்கில வார்த்தைகள் அங்காங்கே ஒளிந்துள்ளன. அதனை 9 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டுமென சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இது என்ன பெரிய சவால், அசால்ட்டாக கண்டுபிடித்துவிடாலமே” என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்பதால் போட்டோவை நன்றாக உற்றுப்பார்த்து முடிவெடுங்கள். இதற்கான ஒரே ஒரு குறிப்பு என்னவென்றால், 6 வார்த்தைகளுமே புத்தகம் மற்றும் வாசிப்புடன் தொடர்புடையது என்பதாகும்.
புதிரை கண்டறிய டிப்ஸ்:-
படத்தில் உள்ள லிவ்விங் ரூமை மேலோட்டமாக நோட்டமிட்டால், எந்த வார்த்தைகளும் உங்கள் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் சில வினாடிகளுக்குப் பிறகு, படத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகளை நீங்கள் அடையாளம் காண முடியும். இந்த பிரெயின் டீசரைக் கண்டறிவது மூளை வளர்ச்சிக்கும் நல்லது என்பதால், 9 விநாடிகளுக்குள் 6 வார்த்தைகளை தேட ஆரம்பியுங்கள்.... இந்த தந்திரமான புதிரைக் கண்டுபிடிக்க உங்களுக்கு கூர்மையான பார்வையும், அதிகவேகமாக செயல்படும் மூளையும் தேவை. கொடுக்கப்பட்ட 9 விநாடிகளுக்குள் எவ்வளவு முயன்றும் விடையை கண்டுப்பிடிக்க முடியாதவர்களுக்காக நாங்களே இங்கு விடையைக் கொடுத்துள்ளோம்.
விடையை காண இங்கே கிளிக்
செய்யவும் 👇👇👇
