போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 08-11-2023
🔘 தேசியம் :-

- பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் விவரங்களை சட்டப்பேரவையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
- மேலும், பீகாரில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
- இதில், பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படுகிறது. பழங்குடியினர் இடஒதுக்கீடு 2% ஆக நீடிக்கிறது.
பீகார் சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய தகவல்கள்
- பீகார் மாநிலத்தில் சுமார் 2.97 கோடி குடும்பங்கள் உள்ளன. அவர்களில் 94 லட்சத்துக்கும் அதிகமானோர் (34.13 சதவீதம்) ஏழைகள் ஆவார்கள்.(அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கிறது)
- பீகாரிலிருந்து வாழ்வாதாரம் தேடி சுமார் 46 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கும், 2.17 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்
- 59.13 சதவீத மக்கள் சொந்த வீடு வைத்துள்ளனர்.
- 40 லட்சம் மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.
- 63,850 பேருக்கு வீடு இல்லை.
- 94 லட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளன.
- கல்வி அறிவு 79.70 சதவீதம் ஆக உள்ளது.
- ஆயிரம் ஆண்களுக்கு தற்போது 953 பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
முக்கிய குறிப்புகள்
- 1931-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக பீகார் அரசுதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தற்போது நடத்தி முடித்ததுள்ளது.

- ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அருகில் உள்ள பக்வான் பிர்சா உயிரியல் பூங்காவில் 20 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கென தனியாக திறந்தவெளி பூங்கா துவக்கப்பட்டுள்ளது.
- இது கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா ஆகும்.
- இந்த பூங்காவில் 88 வகையான வண்ணத்துப்பூச்சியினங்களைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் பூங்கா, வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

தமிழ் | English |
அணைக்கட்டு | Anicut |
காசு | Cash |
கட்டுமரம் | Catamaram |
கறி | Curry |
மாங்காய் | Mango |
தோப்பு | Tope |
பப்படம் | Poppadam |
தேக்கு | Teak |
ஓலை | Olla |
மிளகுத் தண்ணீர் | Mulligatanney |
கூலி | Coolie |
பச்சிலை | Patchouli |
பலகணி | Balcony |
சந்தனம் | Sandal |

- உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் மாவட்டத்தின் பெயரை ஹரிகர் என மாற்றம் செய்ய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இருப்பினும், மாநில அரசின் ஒப்புதலுக்கு பிறகே அலிகரின் பெயர் ஹரிகர் என்று மாற்றம் செய்ய முடியும்.
முக்கிய குறிப்பு
- சமீபத்தில் மகாரஷ்டிராவின் அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜி நகர், தாராஷிவ் என மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
🌍 சர்வதேசம் :-

- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வின் கோபால், நியூ ஜெர்சி மாகாணத்தின் செனட்டராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான வின் கோபால், நியூ ஜெர்சியில் பிறந்து வளர்ந்தவர்.
- இவர் தனது இளங்கலை படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார். அதோடு ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
🔴 தமிழ் நாடு :-

- மத்திய அரசின் வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு டால்பின்களை பாதுகாக்கும் நோக்கில் ‘டால்பின் திட்டத்தை’ செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.8.13 கோடியில் செயல்படுத்தப்படுகிறது
- தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பகத்தில் இவற்றின் முக்கிய வாழ்விடங்கள் உள்ளன.
- சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் டால்பின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- இந்த ‘டால்பின் திட்டம்’ கடல் சூழலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
- மீனவா்கள் மற்றும் கடல் சாா்ந்த பிற மக்களுடன் இணைந்து நவீன தொழில்நுட்பங்கள் மூலம் டால்பின்கள் மற்றும் அவற்றின் நீா்வாழ்விடங்களைப் பாதுகாப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
🟣 முக்கிய நாட்கள் :-

- ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென் எக்ஸ்-கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 ஆம் தேதி உலக கதிரியக்க தினம்(World Radiography day) அனுசரிக்கப்படுகிறது
- இந்நாண்டின் கருப்பொருளானது 'நோயாளிக்கு பாதுகாப்பு கொடுத்தல்' (Celebrating Patient Safety) என்பதாகும்.
🔵 இராணுவம் :-

- நிலத்தில் இருந்து நிலத்திற்கு பாய்ந்து இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் குறுகிய தூர ‘பிரளயம்’(Pralay) ஏவுகணை சோதனையை, DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைக்கோடுகளின் அருகே இந்த ஏவுகணைகளை நிலைநிறுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
‘பிரளயம்’ஏவுகணை - குறிப்புகள்
- பிரளயம் ஏவுகணை 350 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கவல்லது.
- 500 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலான எடையை தாங்கிச் செல்லக்கூடியது.
- இந்த ஏவுகணை, இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடுவானில் கடந்த பிறகு, தனது பாதையை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது
- இது சீன ராணுவத்தின் வசம் இருக்கும், ‘டாங் பெங் 12’ மற்றும் தற்போது உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தி வரும், ‘ஸ்காண்டர்’ ஏவுகணை ஆகியவற்றுக்கு இணையானது
Tags:
Current Affairs